மாமியார் வீட்டிற்கு செல்ல மறுத்த கணவன் : மனமுடைந்த மனைவி விஷம் குடித்து தற்கொலை.!!

Author: kavin kumar
30 January 2022, 6:09 pm
Quick Share

கள்ளக்குறிச்சி : சங்கராபுரம் அருகே கணவர் தனது அம்மா வீட்டிற்கு வர மறுத்ததால் மனமுடைந்த மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள ரங்கப்பனூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பிரபாகரன்- கவிதா தம்பதிகிள். கவிதாவை பிரபாகரன் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். சம்பவத்தன்று கணவன் மனைவி இருவரும் கவிதாவின் உறவினர் வீட்டுக்கு துக்க நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு, அங்கிருந்து திரும்பி வந்தபோது கவிதா அவரது தாய் வீட்டில் தங்கி செல்லலாம் என்று கூறினார்.

ஆனால் இதற்கு பிரபாகரன் உங்கள் வீட்டுக்கு எல்லாம் என்னால் தங்க முடியாது என்று மறுத்ததால் மனமுடைந்த கவிதா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சங்கராபுரம் மற்றும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில்சிகிச்சை அளித்தனர். மேல்சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம் பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கவிதா பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து வடபொன்பரப்பி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால் கவிதாவின் சாவுக்கு வரதட்சணை கொடுமை காரணமா…? அல்லது வேறு ஏதேனும் காரணங்களால் உயிரிழந்துள்ளார் என்பது குறித்து கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் சரவணன் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Views: - 483

0

0