நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மனைவி தோல்வி..!! மனமுடைந்த அதிமுக வேட்பாளரின் கணவர் விஷம் அருந்தி தற்கொலை..!

Author: kavin kumar
22 February 2022, 7:44 pm

விருதுநகர் சாத்தூர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தோல்வி அடைந்ததை அடுத்து அதிமுக வேட்பாளரின் கணவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகராட்சி 24 வார்டுகளில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக பெரும்பான்மையான இடத்தை பிடித்து வெற்றி பெற்றது. இந்தநிலையில் 19வது வார்டு பகுதியில் மொத்தம் 930 வாக்குகள் பதிவானது. இதில் அதிமுக சார்பில் போட்டியிட்ட சுகுணா என்பவர் 215 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் சுபிதாவை விட 280 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

இதனையடுத்து இந்த மனமுடைந்த நாகராஜ் விஷம் அருந்தியுள்ளார் இதனை அறிந்த உறவினர்கள் அவரை தனியார் மருத்துவமனை சிகிச்சைக்கு கொண்டு சேர்த்தனர் இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நாகராஜ் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து சாத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.தற்கொலை செய்துகொண்ட நாகராஜ் நாகராஜ் சாத்தூர் நகராட்சியில் மேஸ்திரியாக பணிபுரிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?