வேலூரில் என்னை நுழைய விடமாட்டார்களா? ஒரு கை பார்ப்போம் : முன்னாள் அமைச்சருக்கு பாஜக கூட்டணி வேட்பாளர் சவால்!

Author: Udayachandran RadhaKrishnan
29 March 2024, 8:35 am
AC
Quick Share

வேலூரில் என்னை நுழைய விடமாட்டார்களா? ஒரு கை பார்ப்போம் : முன்னாள் அமைச்சருக்கு பாஜக கூட்டணி வேட்பாளர் சவால்!

வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் பாரதிய ஜனதா கூட்டணி சார்பில் போட்டியிடும் புதிய நீதி கட்சி தலைவர் ஏசி சண்முகம் வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் செயல் வீரர்கள் கூட்டம் வேலூர் மாநகருக்கு உட்பட்ட மாங்காய் மண்டி பகுதியில் நடைபெற்றது.

இதில் புதிய நீதி கட்சி தலைவரும் பாஜக வேட்பாளருமான ஏசி சண்முகம் பேசுகையில், தமிழகத்தில் மிகப்பெரிய கூட்டணியாக தேசிய ஜனநாயக கூட்டணி உள்ளது. வரும் 7-ம் தேதி அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிரச்சாரத்துக்கு வேலூர் வர உள்ளார். அதேபோல கூட்டணி கட்சித் தலைவர்களான ராமதாஸ், ஓபிஎஸ் உள்ளிட்டோரம் வர உள்ளனர்.

குறிப்பாக பாரத பிரதமர் நரேந்திர மோடியும் வர உள்ளார். 3000 இருசக்கர வாகனத்தில் என்னை அழைத்து வந்தார்கள் அந்த வாகனத்தை ஓட்டிய இளைஞர்களுக்கு நன்றி.

2014 ல் நான் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டியிட்டபோது அத்வானி வந்து பேசுகையில் என்னை வெற்றி பெற செய்தால் மோடி தலைமையிலான அமைச்சரவையில் எனக்கு அமைச்சர் பதவி கொடுக்கிறேன் என சொன்னார்கள். ஆனால் நீங்கள் ஐந்து ஆண்டுகளை வீண் செய்து விட்டீர்கள்.

“ஏன் நீங்கள் ஆரணி தொகுதியில் நின்று இருக்கராமே வேலூரில் ஏன் நீக்குறிங்க என கேட்கிறார்கள். ஆரணியில் ஏன் நிற்கவில்லை என்பதற்க்கான காரணம் சொல்கிறேன். நான் ஆரணி சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏவாக இருந்துள்ளேன். வேலூர் நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்புக்கு முன் ஆரணி இதிலிருந்து.

ஆரணி தொகுதியில் நான் நின்றிருந்தால் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருப்பேன்.

ராஜ்நாத் சிங் என்னிடம் கொடுத்த தாமரையை நான் வேலூரில் வந்து தொலைத்து விட்டேன் அதனை மீட்டெடுக்கவே வேலூர் தொகுதியில் தொடர்ந்து போட்டியிடுகிறேன்.

கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் எட்டாயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோற்றுவிட்டேன். பூத்துக்கு இரண்டு ஓட்டு போட்டு இருந்தால் கூட நான் வெற்றி பெற்றிருப்பேன். நீங்கள் ஐந்து ஆண்டு வீண் செய்து விட்டீர்கள்.

பிஜேபி கூட்டணிக்கு யார் வருவார்கள் என்பதை எல்லாம் எதிர்பார்த்து நான் நிற்கவில்லை. எல்லா வேட்பாளர்களும் ஒரு மாதமாக தான் வருகிறார்கள். நான் 11 மாதமாக இங்கு உழைத்துக் கொண்டிருக்கிறேன்.

நான் கையில் கட்டிக்கொண்டிருக்கும் இந்த வாட்ச் கூட எனது வாழ்நாளில் கடைசி நாளில் என்னோடு வராது. ஆனால் நாம் செய்த பாவ புண்ணியம் நம்மோடு வரும் அதை சிலர் புரிந்து கொள்வதில்லை. புண்ணிய பேங்கில் எவ்வளவு இருக்கிறது என்பதை பார்ப்பவன் தான் இந்த ஏசி சண்முகம்.

“கடந்த 2019 தேர்தலில் எட்டாயிரம் வாக்குவித்தியாசத்தில் தோல்வி அடைந்ததும் தேர்தல் வேண்டாம் என முடிவு எடுத்தேன்”. பிறகு எதிர்க்கட்சிகள் மோடி எத்தனை முறை தமிழகம் வந்தாலும் பூஜ்ஜியம் தான் என சொன்னார்கள் அதை முறியடிக்கவே தேர்தலில் நிற்கிறேன்.

திமுக அரசு சிலிண்டருக்கு 100 மானியம் தருகிறேன் என்றார்களே கொடுத்தார்களா? ஆனால் மோடி அவர்கள் 320 ரூபாயை வழங்குகிறார்.

கொரோனா காலத்தில் மூடப்பட்ட தொழிற்சாலைக்கு 15,000 கோடி கொடுப்பேன் என்றார்கள் இதுவரை ஒரு கோடியாவது கொடுத்திருக்கிறார்களா?

பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்றார்கள் குறைத்தார்களா?
பகுதி நேர ஆசிரியர்கள், செவிலியர்கள் பணி நிரந்தரம் என்றீர்கள் செய்தீர்களா? ரோட்டில் இருக்கிறார்கள்.

400 ரூபாய் கட்டிய மின் கட்டணம் இன்றைக்கு ஆயிரத்தை தாண்டி இருக்கிறது. ஐந்து ஆண்டு எம்பியாக இருந்தவர்கள் என்ன செய்தார்கள் பேருந்து நிறுத்தத்தை கட்டினது அப்பா, மகன் போட்டோவை போட்டுக் கொள்வதற்காக தான் கட்டினார்கள் தவிர வேறு என்ன செய்தார்கள்?

என்னை எதிர்த்துப் போட்டியிடுபவர் கூட பள்ளி கல்லூரியை வைத்துள்ளார் ஏதேனும் இலவச சீட்டு கொடுக்கிறேன் என சொல்ல சொல்லுங்கள் பார்க்கலாம். திமுக காரர்களுக்கு அவர்கள் கொடுப்பதில்லை. ஆனால் நான் பல மாணவர்களுக்கு இலவச சீட்டு கொடுத்துள்ளேன்.

“மிக கேவலமான செய்தியை எதிர்க்கட்சி வேட்பாளர் கதிர் அண்ணன் சொல்லி இருக்கிறார். தமிழக அரசு குறைந்த ஆட்களுக்குக்கு மட்டுமே வழங்கிய மகளிர் உரிமை தொகையை கொச்சைப்படுத்தி பேசியுள்ளார். “ஏம்மா முகம் எல்லாம் பல பலன்னு இருக்குது பேரன் லவ்லி போட்டு வந்திருக்கீங்களா? நாங்க கொடுத்த ஆயிரமா என கேட்டு இருக்கிறார்.* இது எவ்வளவு பெரிய அசிங்கம.

நான் ஒரு கேரண்டி கொடுக்கிறேன். ஆறு தொகுதிக்கும் எம்பி அலுவலகம், இலவச திருமண மண்டபம் கட்டுவேன், ஐந்து ஆண்டும் இங்கேயே இருந்து சேவை செய்வேன்.

ஒன்றரை லட்சம் முதல் 2 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வேலூர் தொகுதியில் தாமரை மலரும். அனைத்து அறுவை சிகிச்சைகளும் இலவசமாக செய்து கொடுக்கப்படும், அனைத்து குடும்ப திருமணம் மற்றும் இறப்புக்கும் நான் உதவுவேன் என பேசினார்.

பின்னர் பாஜக வேட்பாளர் ஏசி சண்முகம் அளித்த பேட்டியில் , கடந்த தேர்தலில் அதிமுக என்னை முதுகில் குத்திவிட்டது என நீங்கள் பேசியதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி இதேபோன்று பொய்யாக பேசிக் கொண்டிருந்தால் ரோட்டுக்கு வருவேன் மேலும் அவரை தொகுதிக்குள் நுழைய விடாதவாறு செய்து விடுவேன் என பேசியது குறித்து கேட்டதற்கு, முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி என் மீது வழக்கு தொடரட்டும் அதனை சந்திக்க நான் தயாராக உள்ளேன் என்றார்.

தாமரையில் நான் வேலூரில் நிற்கும் போது அதிமுகவுக்கும் எனக்கும் தான் போட்டி. எனக்கும் அதிமுகவும் 1400 வாக்குகள் தான் வித்தியாசம். அப்போது தோற்றேன்.

பின்னர் நான் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் 2019- ல் நின்ற போது எனக்கு எவ்வளவு ஓட்டு வந்திருக்க வேண்டும் ஆனால் 6000 ஓட்டு கூடுதலாகி 8000 வாக்கு வித்தியசத்தில் தோற்றேன்.

2014 நாடாளுமன்றத் தேர்தலில் தாமரை சின்னத்தில் வாணியம்பாடியில் எனக்கு 1800 வாக்கு தான் வித்தியாசம். அதன் பிறகு 2019 தேர்தலில் இரட்டை இலையில் நின்ற போது 23,000 வாக்கு வித்தியாசம் வந்தது இதற்கு என்ன காரணம் – ஆகவே மக்கள் நல்ல முடிவு எடுப்பார்கள் என வேலூர் நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் ஏசி சண்முகம் கூறினார்

Views: - 371

0

0