சுடுகாட்டை கூட விட்டுவைக்காத அவலம்.. மணல் திருடும் கும்பல் : கண்டுகொள்ளாத நிர்வாகம்..பாஜக மறியல்!

Author: Udayachandran RadhaKrishnan
18 செப்டம்பர் 2024, 5:02 மணி
Burial Ground
Quick Share

சிவகங்கை மாவட்டம், சிவகங்கையில் தெற்கு மயானத்தில் குப்பைகளை குழி தோண்டி புதைப்பதாக கூறி மிக பெரிய பள்ளத்தை தோண்டி கிராவல்மணல் திருட்டு நடகிறது.

கிராவல் மண்னை இரவு பகலாக கடத்தப்படு வருகின்றது. மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளாமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நகராட்சிக்குட்பட்ட இந்த மயானத்தில் ஏற்கனவே உடல்கள் புதைக்கப்பட்ட நிலையில் தற்போது நவீன எரிவாயு தகனமேடை உள்ளது.

மயானத்தின் பின்புறம் ஆழமாக குழி தோண்டி அதில் குப்பைகளை கொட்டி மூட நகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

மேலும் படிக்க: ஒரே நாடு ஒரே தேர்தல்… ஒப்புதல் அளித்த மத்திய அமைச்சரவை : விரைவில் அமல்..!!

அதனை காரணம் காட்டி அந்த மயானத்தில் குழி தோண்டும் போது எடுக்கப்படும் கிராவல் மணல் தரமாக இருப்பதால் அதனை அந்த பணியை மேற்கொள்பவர்கள் கடத்தி விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Burial Ground

மணல் திருட்டு நடப்பதை வீடியோவாக எடுத்து வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர் மயானத்தையும் விட்டு வைக்கவில்லை மணல்கொள்ளையர்கள்.

இந்நிலையில் இன்று மணல் கடத்தப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் பாரதிய ஜனதா கட்சியினர் மானாமதுரை சாலையில் உள்ள அம்பேத்கர் சிலை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின் விசாரணை செய்து நடவடிக்கைஎடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர்

  • CM Air அலற விட்ட மெரினா : மக்கள் நலனில் பூஜ்யம்… விளம்பரத்தால் ராஜ்ஜியம்!
  • Views: - 167

    0

    0