‘அடகு வைத்த நகைக்கு வட்டி கொடுங்க’… பைனான்ஸ் அதிகாரிகள் போல் நடித்து வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் நகை பறிப்பு

Author: Babu Lakshmanan
10 November 2022, 1:50 pm

கரூர் : மணப்புரம் கோல்டு பைனான்ஸ்-ல் கணவர் அடகு வைத்த நகைக்காக வட்டி என்று கூறி இரவு நேரத்தில் பெண்ணிடம் அத்துமீறி ஒரு பவுன் நகைகளை கழட்டி சென்ற கும்பலால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர் வையாபுரி நகர் பகுதியை சார்ந்தவர் காமராஜ் (35). இவர் இதே பகுதியில் உணவு விடுதி நடத்தி வந்த நிலையில், தன் நகைகள் மற்றும் மனைவி நகைகளை மணப்புரம் கோல்டு பைனான்ஸ்-ல் அடமானம் வைத்து, பின்னர் தொழிலில் நஷ்டம் அடைந்து வேறு ஊர் சென்று பிழைப்பு தனம் நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், நேற்று மாலை 6.50 மணியளவில் அதே மணப்புரம் கோல்டு பைனான்ஸ்-ல் இருந்து ஒரு பெண்மணி மற்றும் 3 ஆண்கள் என்று 4 பேர் கூட்டாக , அவரது இல்லத்திற்கு சென்றுள்ளனர். அப்போது, அவரது மகன், மகள் டியூசன் சென்ற நிலையில், அவரது மனைவி ராசாத்தி மட்டும் வீட்டில் இருந்தார்.

ராசாத்தியை சந்தித்த அந்த நபர்கள், “நாங்கள் மணப்புரம் கோல்டு பைனான்ஸ்-ல் இருந்து வருகின்றோம். உங்கள் கணவர் எங்களது நகை பைனான்ஸில் ரூ. 1 லட்சத்து 52 ஆயிரம் பணம் பெற்றுள்ளார். அதற்கு வட்டிக்கு பணம் தேவை,” என்று கேட்டுள்ளனர்.

அதற்கு அந்த பெண்மணி, “வீட்டில் பெரியவர்கள் யாரும் இல்லை, என் கணவரும் ஊரில் இல்லை. நான் மதியம் அலுவலகத்திற்கு வந்து பணம் கட்டி விடுகின்றேன்,” என்று கூற, அந்த குழு (ஒரு பெண் உள்ளிட்ட 3 ஆண்கள் கொண்ட தனியார் கோல்டு பைனான்ஸ் ) விடாமல் அந்த பெண்மணியை சமரசம் செய்து காதிலிருந்த தோடு கழட்டியுள்ளனர்.

அதோடு, இது எவ்வளவு வரும் என்று அந்த பெண்மணியிடம் கேட்க, “அந்த பெண்மணியோ 6 கிராம் வரும்,” என்று கூறியுள்ளார். அதற்கு அந்த குழு பத்தாது. ஆகையால் கையில் அணிந்திருக்கும் மோதிரத்தினையும் கொடு, ஒரு பவுன் நகையாவது வேண்டும் என்று வலுக்கட்டாயமாக கூறி அந்த பெண்மணியிடமிருந்து பறித்து சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினர் கரூர் டவுன் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்க, போலீஸார் விசாரணை நடத்தினர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண்மணி, “நான் எவ்வளவோ, எடுத்து கூறியும் வலுக்கட்டாயமாக என்னிடம் இருந்து வாங்கி சென்று விட்டனர் என்றும், தற்போது நிர்கதையாக ஆளாக்கப்பட்டுள்ளேன்,” என்றும் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!