சாலையோர சாக்கடைக்குள் கிடந்த சூட்கேசில் பெண் சடலம் : திகிலை ஏற்படுத்திய திருப்பூர் சம்பவம்!!!

Author: Udayachandran RadhaKrishnan
7 February 2022, 12:24 pm

திருப்பூர் : கேட்பாரற்று கிட்நர் சூட்கேஸில் இளம் பெண் சடலம் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் – தாராபுரம் சாலை, பொல்லிக்காளிபாளையம் பிரிவு அருகேயுள்ள ஒத்தக்கடை என்ற பகுதியில், சாலையோர சாக்கடையில் சூட்கேஸ் ஒன்று ரத்தக் கறையுடன் இருந்ததைக் கண்டு அவ்வழியாக சென்றவர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சூட்கேசை கைப்பற்றி சோதனை செய்ததில் சூட்கேசுக்குள் பெண் சடலம் ஒன்று இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் உயிரிழந்த பெண் எந்த பகுதியை சேர்ந்தவர்? வேறு எங்காவது கொலை செய்துவிட்டு இப்பகுதியில் வீசி சென்றார்களா, ? முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சூட்கேஸில் பெண் சடலம் இருந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?