’70 பேரை கூப்பிட்டு வந்தேன்.. 40 டோக்கன் தான் இருக்கு’..? திமுக கூட்டத்தில் நிர்வாகியிடம் பெண் வாக்குவாதம்..!!

Author: Babu Lakshmanan
16 April 2024, 11:42 am

பள்ளிபாளையம் பகுதியில் திமுக பிரச்சாரத்திற்கு ஆள் சேர்ப்பதற்காக வழங்கிய டோக்கன் போதவில்லை என பெண் ஒருவர் திமுக நிர்வாகியிடம் சண்டையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபடும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு பாராளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடுபவர் பிரகாஷ். இவர் திமுக மற்றும் கூட்டணி கட்சியினருடன் ஈரோடு தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், நேற்று பள்ளிபாளையம் நகரப் பகுதிகளுக்குட்பட்ட பல்வேறு இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

மேலும் படிக்க: மிரட்டிய பாஜக.. துணிச்சல் காட்டிய இபிஎஸ்… பாஜகவுக்கு வாய்ப்பே இல்ல ; வைகைச் செல்வன் பரபர பேச்சு

பள்ளிபாளையம் அக்ரகாரம் பகுதியில் இவர் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு சென்ற பொழுதுஇ இந்த பிரச்சாரத்திற்காக கூட்டப்பட்டிருந்த பெண்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, அதன் மூலம், பணம் பட்டுவாடா செய்யப்பட இருந்தது.

இந்நிலையில் ஒரு பெண் தான் 74 நபர்களை கூட்டி வந்ததாகவும், ஆனால் தனக்கு 70 டோக்கன்கள் மட்டுமே வழங்கப்பட்டது எனவும், அப்பகுதி திமுக பிரமுகரிடம் வாக்குவாதம் செய்தார். மேலும், அவரிடம் விசாரித்தபோது, திமுக தேர்தல் பிரச்சாரத்திற்கு வரும் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக 100 ரூபாய் பணம் மற்றும் தட்டு வழங்குவதற்கு டோக்கன் வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.

மேலும் படிக்க: சிங்கத்திற்கும், சிறுத்தைக்கும் மத்தியில் மாட்டிக்கிட்ட ஆட்டுக்குட்டி தான் அண்ணாமலை ; செல்லூர் ராஜு விமர்சனம்!!!

மேலும், 70 பேருக்கு மட்டுமே டோக்கன் வழங்கியதாகவும், மீதம் நான்கு பேர் முடியை பிய்த்துவிடுவார்கள் எனவும் தெரிவிக்கிறார். டோக்கன் மூலம் பிரச்சார கூட்டத்திற்கு ஆட்களை அழைத்து வரும் பொது மக்களுக்கு திமுகவினர் பணப்பட்டுவாடா செய்வது இதன் மூலம் அம்பலம் ஆகியுள்ளது.

மேலும் இந்த பிரச்சாரத்தின் போது சாலையில் இரு புறமும் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டதால் நீண்ட தூரத்திற்கு வாகன நெரிசல் ஏற்பட்டது. இந்த வாகன நெரிசலில் ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்று சிக்கிக் கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

  • after retro flops Pooja Hegde Unlucky Actress பூஜா ஹெக்டே ராசியில்லாத நடிகையா? அப்போ ஜனநாயகன் கதி?