கஞ்சா போதையில் இரவில் இளைஞர்கள் அட்டூழியம்.. கார் கண்ணாடிகளை அடித்து நொறுக்கிய சிசிடிவி காட்சிகள்..!!

Author: Babu Lakshmanan
13 August 2022, 2:25 pm
Quick Share

காஞ்சிபுரத்தில் நள்ளிரவில் கஞ்சா போதையில் வீட்டின் வெளியே நிற்கும் காரின் கண்ணாடிகளை, இளைஞர்கள் கற்களால் அடித்து நொறுக்கும் சிசிடிவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் ஒலிமுகமது பேட்டை பகுதியில் உள்ள அருள் நகர் ராமானுஜர் தெருவில் சாகுல் ஹமீது என்பவர் வசித்து வருகிறார். இவர் கார்களை வைத்து ட்ரான்ஸ்போர்ட் நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் சாகுல் ஹமீத் தனது காரில் சென்னைக்கு சென்று விட்டு இரவு வீடு திரும்பி, தன்னுடைய வீட்டிற்கு பக்கத்தில் உள்ள காலி மனையில் வழக்கம் போல் காரை நிறுத்திவிட்டு சென்றுள்ளார்.

இந்த நிலையில், இன்று அதிகாலை 3 மணியளவில் அக்கம் பக்கத்தினர், ஹமிதை தொடர்பு கொண்டு கார் கண்ணாடி முற்றிலுமாக உடைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர். ஹமீது வெளியே வந்து பார்த்ததில் கார் கண்ணாடி முற்றிலுமாக கல்லால் உடைக்கப்பட்டது தெரியவந்தது.

ஹமீத் தனது வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா கட்சியை பார்த்த பொழுது, நள்ளிரவு 1 மணிக்கு மேல் சட்டை இல்லாமல் வந்த இரண்டு இளைஞர்கள், கஞ்சா போதையில் பெரிய கற்களை எடுத்து கார் கண்ணாடியை உடைக்கும் காட்சி பதிவாகியுள்ளது.

இச்சம்பவம் குறித்து பாலு செட்டி சத்திரம் காவல் நிலையத்தில் சாகுல் அமீது புகார் அளித்ததன் பெயரில், போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சியை வைத்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

கஞ்சா போதையில் நாளுக்கு நாள் குற்றங்கள் அதிகம் நடைபெற்று வரும் நிலையில், இரவு நேரத்தில் கஞ்சா போதையில் உலா வரும் போதை ஆசாமிகளை இரும்பு கரம் கொண்டு ஒடுக்கபட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Views: - 186

0

0