‘கோவிலுக்குள்ள எவன்டா போகச் சொன்னா’… பட்டியலின சமூக இளைஞரை பொது இடத்தில் வைத்து ஆபாசமாக திட்டிய திமுக பிரமுகர்!!

Author: Babu Lakshmanan
30 January 2023, 2:38 pm

சேலத்தில் பட்டியலின வாலிபர் கோவிலுக்குள் சென்றதால், அவரை ஊர்மத்தியில் நிற்க வைத்து ஆபாச வார்த்தைகளால் திமுக ஒன்றிய செயலாளர் திட்டிய வீடியோ வைரலாகி வருகிறது.

சேலம் மாவட்டம், திருமலைகிரி பகுதியில் இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான மாரியம்மன் கோவிலுக்குள் பட்டியல் சமூகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் நுழைந்தார்.

இதனை அறிந்த திருமலைகிரி திமுக ஒன்றிய செயலாளர் மாணிக்கம், ஊர் பொதுமக்கள் முன்னிலையில் அந்த நபரை ஆபாச வார்த்தைகளால் திட்டி அடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. சமூகநீதி பற்றி பேசும் திமுகவின் ஒன்றிய செயலாளர், இவ்வாறு சாதிய வன்மத்தோடு இளைஞரை திட்டும் வீடியோ வெளியாகியிருப்பது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

  • rashmika mandanna first horror movie thama is vampire movie இரத்தக்காட்டேரியாக மாறும் கியூட் நடிகை? ராஷ்மிகா மந்தனாவின் புதிய ஹாரர் படத்தின் கதை இதுதானா?