‘திமுக-காரங்க மேல புகார் கொடுத்தால் ஏத்துக்க மாட்டீறாங்க’… தீக்குளிக்க முயன்ற தாய், மகன்… நிலத்தை அபகரித்து விட்டதாக திமுக பிரமுகர் மீது புகார்..!!

Author: Babu Lakshmanan
30 January 2023, 2:18 pm
Quick Share

சேலம் : தங்களுக்கு சொந்தமான 30 சென்ட் நிலத்தை ஆக்கிரமித்த திமுக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட தாய் மகன் ஆட்சியர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் வீராணம் மெயின் ரோடு டிஎம்எஸ் செட் பகுதியை சேர்ந்த மோகனா மற்றும் அவரது மகன் கோவிந்தராஜ் ஆகிய இருவரும் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வந்தனர். அப்போது, மறைத்து வைத்திருந்த டீசலை எடுத்து இருவரும் தலையில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர். பாதுகாப்பில் இருந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி சமாதான பேச்சு நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து இது குறித்து கோவிந்தராஜ் கூறும் போது :- எங்களுக்கு சொந்தமான 30 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தை எனது மாமாவும், திமுக பிரமுகருமான கோவிந்தராஜ் என்பவர் அபகரித்துக் கொண்டு தர மறுக்கிறார். மேலும், நிலத்தை கேட்டதற்கு கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்.

இது குறித்து அம்மாபேட்டை காவல் நிலையத்தில் பலமுறை புகார் கொடுத்தும், எந்தெந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவேதான் வாழ வழியில்லாமல் இருக்கும் நாங்கள் இறப்பதுதான் மேல் என நினைத்து தீக்குளிக்க முயற்சி செய்தோம். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து எங்கள் நிலத்தை உடனடியாக நடவடிக்கை எடுத்து நிலத்தை மீட்டு தர வேண்டும், என தெரிவித்தார்.

Views: - 407

0

0