கோவில் திருவிழாவில் கையில் வானவேடிக்கை வெடித்த இளைஞர் : வைரலாகும் வீடியோவால் சிக்கல்!!

Author: Udayachandran RadhaKrishnan
25 February 2023, 8:53 pm

நத்தம் மாரியம்மன் நகர் வலம் வரும்போது கையில் வானவேடிக்கை வெடியை வெடித்த இளைஞரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பெருந்திருவிழா நடைபெற்று வருகிறது இதில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நத்தம் மாரியம்மன் சர்வ அலங்காரத்தில் நகர் வலம் வந்து பக்தருக்கு காட்சியளிப்பார்.

அம்மன் நகர்வலம் வரும்போது வழி நெடுகிலும் பக்தர்கள் சாமிக்கு அபிஷேகம் செய்வார் அம்மன் நகர்வலம் வரும்போது வெடிகள் வெடிக்கப்படுவது வழக்கம். வெள்ளிக்கிழமை இரவு அம்மன் மயில் வாகனத்தில் மீனாட்சி அலங்காரத்தில் நகர்வலம் வரும்போது நத்தம் – திண்டுக்கல் சாலை மீனாட்சிபுரம் முன்பாக இளைஞர் ஒருவர் கைகளில் வானவேடிக்கையை வைத்துக்கொண்டு வெடிக்க வைத்ததை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.

மேலும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?