ஒரே மாதத்தில் 19 லட்சம் பயனர்களை பிளாக் செய்த வாட்ஸ்அப்!!!

Author: Hemalatha Ramkumar
2 ஜூலை 2022, 6:28 மணி
Quick Share

புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021க்கு இணங்க மே மாதத்தில் இந்தியாவில் 19 லட்சத்துக்கும் அதிகமான மோசமான கணக்குகளை தடை செய்ததாக மெட்டாவுக்குச் சொந்தமான வாட்ஸ்அப் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

ஏப்ரல் மாதத்தில் மட்டுமே இந்தியாவில் 16.6 லட்சத்திற்கும் அதிகமான மோசமான கணக்குகளை வாட்ஸ்அப் தடை செய்தது.
இந்தியாவில் மே மாதம் 528 புகார் அறிக்கைகளை நிறுவனம் பெற்றது.
ஏப்ரல் மாதத்தில், வாட்ஸ்அப் 844 புகார்களை இந்தியாவில் பெற்றது.

“பல ஆண்டுகளாக, நாங்கள் தொடர்ந்து செயற்கை நுண்ணறிவு மற்றும் பிற நவீன தொழில்நுட்பம், விஞ்ஞானிகள் மற்றும் நிபுணர்கள் மூலம் எங்கள் தளத்தில் உள்ள பயனர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் வகையில் முதலீடு செய்து வருகிறோம்” என்று வாட்ஸ்அப் செய்தித் தொடர்பாளர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

“இந்த பயனர் பாதுகாப்பு அறிக்கையில் பெறப்பட்ட பயனர் புகார்களின் விவரங்கள் மற்றும் வாட்ஸ்அப் எடுத்த நடவடிக்கை மற்றும் தளத்தை தவறாகப் பயன்படுத்தியதை அடுத்து வாட்ஸ்அப் எடுத்த தடுப்பு நடவடிக்கைகள் உள்ளன” என்று செய்தித் தொடர்பாளர் மேலும் கூறினார்.

தகவல் தொழில்நுட்பம் விதிகள் 2021, 4(1)(d) இன் படி வெளியிடப்பட்ட அறிக்கையில், இந்தியாவில் உள்ள பயனர்களிடமிருந்து பெறப்பட்ட புகார்களுக்கு பதிலளிக்கும் வகையில் வாட்ஸ்அப் எடுத்த இந்த நடவடிக்கைகள் உள்ளன.

புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021 இன் கீழ், 5 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட பெரிய டிஜிட்டல் மற்றும் சமூக ஊடக தளங்கள், மாதாந்திர இணக்க அறிக்கைகளை வெளியிட வேண்டியது கட்டாயம் ஆகும்.

  • Centipedes திருப்பதி கோவில் அன்னதான உணவில் பூரான்.. லட்டை தொடர்ந்து அடுத்த சர்ச்சையால் பக்தர்கள் கொந்தளிப்பு!
  • Views: - 5553

    0

    0