பிறருக்கு தெரியாமல் போன்கால்களை ரெக்கார்ட் செய்வது எப்படி???

Author: Hemalatha Ramkumar
23 March 2022, 2:25 pm
Quick Share

ஒரு சில சமயங்களில் நாம் பிறரிடம் மொபைலில் பேசும்போது அவர்கள் உடனான உரையாடலை ரெக்கார்ட் செய்யும் கட்டாயத்தில் இருப்போம். இது பல்வேறு காரணங்களுக்காக செய்யப்படுகிறது.

அந்த வகையில் நாம் கால் ரெக்கார்ட் செய்வது எதிரில் பேசும் நபருக்கு தெரியாமல் இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும். பொதுவாக கால் ரெக்கார்ட் செய்யும் போது அது எதிரில் பேசும் நபருக்கு தெரிந்து விடும். அவர்களுக்கு தெரியாமல் ரெக்கார்ட் செய்ய வேண்டும் என நினைப்பவர்களுக்கு இது சிக்கலாக இருக்கும்.

ஆனால் இந்த சிக்கலை தீர்க்க ஒரு எளிய வழி ஒன்று உள்ளது. அதற்கு நீங்கள் TTSL என்ற ஆப்பை டவுன்லோட் செய்ய வேண்டும். இந்த ஆப்பை இன்ஸ்டால் செய்த பிறகு அதனை திறக்க வேண்டிய அவசியம் இல்லை.

உடனடியாக உங்கள் மொபைல் Settings-க்கு சென்று Additional Settings என்பதைத் திறக்கவும். அதில் Languages and input-யில் Text-to-speech output என்பதை கிளிக் செய்யவும். இதில் Preferred engine என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்து அதில் நீங்கள் இன்ஸ்டால் செய்த TTSL ஆப் குறிப்பிடப்பட்டு இருக்கும். அதை கிளிக் செய்து OK கொடுக்கவும்.

இப்போது உங்கள் மொபைல் பேக்கிரவுண்டில் ரன் ஆகி கொண்டு இருக்கும் அனைத்து ஆப்களையும் மூடவும். டயலர் ஆப்பை திறந்து லாங் பிரஸ் செய்து Clear Data கொடுக்கவும். அவ்வளவு தான் நாம் செய்து கொண்டு இருந்த வேலை முடிவுற்றது. இப்போது நீங்கள் கால் ரெக்கார்ட் செய்தாலும் எதிரே இருக்கும் நபருக்கு அது தெரியாது. முயற்சி செய்து பாருங்கள்.

Views: - 2780

2

1