காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி போடும் விஜய்? ரகசியத்தை கசிய விட்ட காங்., தலைவரால் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
10 September 2024, 1:23 pm

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் மகிளா காங்கிரஸ் கட்சியினர், மத நல்லிணக்க ஒற்றுமையை வலியுறுத்தியும் 33 சதவீத பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்ற வேண்டும், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மகிளா காங்கிரஸ் மாநிலத் தலைவி அசீனா சையது தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் நடை பயணத்தில் ஈடுபட்டனர்.

ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ ஊர்வசி அமிர்தராஜ் நடைபயணத்தை துவக்கி வைத்தார். சாத்தான்குளம் காமராஜர் சிலையில் இருந்து தொடங்கிய நடைபயணமானது காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் முடிவடைந்தது.

பின்னர் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மகிளா காங்கிரஸ் கட்சியினரின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

பின்னர், நடைப்பயணம் குறித்து மகிளா காங்கிரஸ் கட்சித் தலைவர் அசினா சையது கூறுகையில், பெண்கள் பாலியல் ரீதியாக பாதிக்கப்படும்போது பாஜக கட்சியினர் மௌனம் சாதித்து வருகின்றனர்.

பாஜக ஆளும் மாநிலங்களிலேயே பாலியல் ரீதியாக பெண்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆளும் பாஜக அரசு மௌனம் சாதிப்பதை கண்டித்து ராகுல் காந்தியின் உத்தரவின் படி மகிலா காங்கிரஸ் சார்பில் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறோம்.

இதன்படி இன்று தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் சாத்தான்குளத்தில் நடை பயணம் நடைபெற்றது. போதைப் பொருட்கள் விற்பனை என்பது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

பிரதமர் மோடியின் சொந்த ஊரான குஜராத்தில் இருந்தே போதை பொருட்கள் அதிக அளவில் விற்பனையாகிறது. நடிகர் விஜய் கட்சி தொடங்கி இருப்பதை வரவேற்கிறோம்.

அவர் கட்சி தொடங்கும் முன்பு தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். அவர் காங்கிரஸ் கட்சியில் இணைவார் என எதிர்பார்த்தோம். விரைவில் அது நடக்கும் என நம்புகிறோம் என கூறினார் அவர்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?