14 மாதங்களில் 20 ஆயிரம் கோடியை கொள்ளையடித்த திமுக… நல்லது செய்ததாக திமுகவுக்கு வரலாறே இல்ல… இபிஎஸ் பகிரங்க குற்றச்சாட்டு..!!

Author: Babu Lakshmanan
9 August 2022, 6:34 pm
Quick Share

சென்னை : 14 மாத கால ஆட்சியில் 20 ஆயிரம் கோடி கொள்ளையடித்திருக்கிறது திமுக என்று அதிமுக இடைக்கால பொதுசெயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.

வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக தொண்டர்கள் சார்பில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. இதில், திரளான அதிமுகவினர் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது :- அதிமுகவை சிதைத்துவிடலாம் என திமுக நினைக்கிறது. அதற்காக பணிகளை செய்கிறார்கள். அது ஒரு போதும் நடக்காது. பல சோதனைகளை வென்றது அதிமுக. ஆட்சி அதிகாரம் கையில் உள்ளதால், கேள்வி கேட்பவர்கள் மீது வழக்கு போட்டு கைது செய்கின்றனர்.

இது விஞ்ஞான உலகம். இலங்கையில் ஏற்பட்ட சூழல் தமிழகத்திலும் ஏற்படும் வாய்ப்புள்ளது. ஜாக்கிரதையாக பார்த்துகொள்ளுங்கள். அதிமுக பல மக்கள் நல திட்டங்களை கொண்டு வந்தது. அதனை தொடர்ந்து, செயல்படுத்துங்கள். திமுக வாக்குறுதி ஒன்றை கூட நிறைவேற்றவில்லை.

இதே நிலை தொடருமானால் நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலும் வரும். அடுத்தது மக்கள் ஆதரவு அதிமுகவுக்கு உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்து 14 மாதங்களில் 20 ஆயிரம் கோடி ஊழல், கொள்ளை நடந்துள்ளது. இதற்கு பதில் சொல்ல வேண்டிய காலம் வரும், என்று பேசினார்.

Views: - 336

0

0