நெல்லையை ஸ்தம்பிக்க வைத்த 20 செ.மீ மழை… பேய் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு : அதிக மழை பெய்தது எங்கே? முழு விபரம்!

Author: Udayachandran RadhaKrishnan
17 December 2023, 7:15 pm

நெல்லையை ஸ்தம்பிக்க வைத்த 20 செ.மீ மழை… பேய் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு : அதிக மழை பெய்தது எங்கே? முழு விபரம்!

திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்கடி, தென்காசி மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. திருநெல்வேலி பாளையங்கோட்டை, என்ஜிஓ காலனி, பழைய பேட்டை உள்பட பல இடங்களில் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது. தாமிரபரணியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

மேலும் தாமிரபரணியில் மழை வெள்ளம் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தாமிரபரணி ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதியான மேற்கு தொடர்ச்சி மழையில் நல்ல மழை பெய்து வருவதால் ஆற்றில் தண்ணீரில் அளவு என்பது மணிக்கு மணி அதிகரித்து வருகிறது. இன்று மாலைக்குள் தாமிரபரணியில் 30 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்படும்.

இதனால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த வரும் 24 மணிநேரத்தில் கன்னியாகுமரி திருநெல்வேலி, தென்காசி, மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமுதல் அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இத்தகைய சூழலில் தான் இன்று மதிய நிலவரப்படி திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு குறித்த விபரம் வெளியாகி உள்ளது. அதிகபட்சமாக மூலக்கரைப்பட்டியில் 20 செமீ மழை பெய்துள்ளது. குறைந்தபட்சமாக பாளையம்கோட்டையில் 90 செமீட்டர் மழை பெய்துள்ளது.

மேலும் அம்பாசமுத்திரத்தில் 13 செமீட்டர் மழையும், சேரன்மகாதேவியில் 14.7 செமீட்டர் மழையும், மணிமுத்தாறில் 13.5 செமீட்டர் மழையும் பெய்துள்ளது. நாங்குநேரியில் 18.6 செமீ, பாபநாசத்தில் 14.3 செமீ, ராதாபுரத்தில் 19.1 செமீ, திருநெல்வேலியில் 10.5 செமீ, சேர்வலாறு அணை பகுதியில் 9.8 செமீ, களக்காட்டில் 16.2 செமீ, கொடிமுடியாறு அணையில் 15.4 செமீ, நம்பியாறு அணையில் 18.5 செமீ மழை பெய்துள்ளது. இந்த மழை அளவு எல்லாம் மதியம் 2.30 மணியளவில் பதிவானவை. அதன்பிறகும் கூட தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இன்று நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் முடங்கினர்.

  • actress kayadu lohar increased his salary double இதுதான் சரியான தருணம்-சமயம் பார்த்து உஷாராக சம்பளத்தை ஏற்றிய கயாது லோஹர்!