2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது… பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்..!!!

Author: Babu Lakshmanan
20 May 2023, 9:11 am
Quick Share

ரூ.2000 நோட்டுகளை திரும்பப் பெறப்போவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. சுத்தமான நோட்டுக் கொள்கையை காரணம் காட்டி, இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதன்மூலம், பொதுமக்கள் தங்களிடம் உள்ள ரூ.2000 நோட்டுகளை வாங்கிகளில் டெபாசிட் செய்யலாம் அல்லது ஒரே நேரத்தில் ரூ.20 ஆயிரம் வரையிலான சிறிய நோட்டுகளாக மாற்றிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெற்ற விவகாரத்தில் பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள் இதோ,

கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு திரும்பப் பெறும் போது, 2000 ரூபாய் நோட்டு அறிமுகம் செய்யப்பட்டது.

மற்ற ரூபாய் நோட்டுகளின் புழக்கம் அதிகரிப்பதன் இலக்கை எட்டிய பிறகு, 2018-19 ஆம் ஆண்டில் ரூ.2,000 நோட்டு அச்சடிப்பது நிறுத்தப்பட்டது.

மே 23 முதல் செப்டம்பர் 30 வரை பொதுமக்கள் தங்களிடம் உள்ள ரூ.2,000 நோட்டுகளை டெபாசிட் செய்யலாம் அல்லது சிறிய நோட்டுகளாக மாற்றிக் கொள்ள அவகாசம் வழங்கப்பட்டுள்ளது

20,000 ரூபாய் மதிப்புள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை (10 நோட்டுகள்) ஒரே நேரத்தில் மாற்றிக்கொள்ள முடியும்

Views: - 388

0

0