33,500ஐ தாண்டிய கொரோனா பலி எண்ணிக்கை : தமிழகத்தில் இன்றைய பாதிப்பு நிலவரம்!!

13 July 2021, 9:05 pm
Quick Share

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 2,505 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 1,40,132 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 2,505 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 25,23,943 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் ஏற்கெனவே 165 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், மேலும் 160 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 24 மணிநேரத்தில் 12 வயதிற்குட்பட்ட 123 சிறார்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 12 வயதிற்குட்பட்ட சிறார்களுக்கு தொற்று அதிகரித்து வந்தநிலையில் தற்போது குறைந்துவருகிறது.

கொரோனாவால் மேலும் 48 பேர் இறந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 33,502 ஆக உயர்ந்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் 34 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 14 பேரும் உயிரிழந்துள்ளனர். இதில் இணைநோய்கள் இல்லாதோர் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 31,218ஆக உள்ளது. கொரோனாவிலிருந்து மேலும் 3,058 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 24,59,223 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

Views: - 114

0

0