2ஜி வழக்கு மேல்முறையீட்டு மனு இன்று முதல் விசாரணை : திமுக எம்.பி.க்கள் கனிமொழி, ஆ.ராசாவிற்கு சிக்கல்..!

By: Babu
5 October 2020, 11:16 am
Quick Share

டெல்லி : தி.மு.க. எம்.பி.க்கள் கனிமொழி, ஆ.ராசா ஆகியோருக்கு எதிரான 2ஜி வழக்கின் மேல்முறையீட்டு மனு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று முதல் விசாரணைக்கு வருகிறது.

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, தனியார் தொலை தொடர்பு சேவை நிறுவனங்களுக்கு, ‘2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான உரிமம் வழங்கியதில் நடந்த முறைகேட்டினால், அரசுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும், சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத் துறை சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த தி.மு.க.வின் மத்திய அமைச்சர் ஆ.ராசா, தி.மு.க. உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட 17 பேரை விடுதலை செய்து கடந்த 2017ம் ஆண்டு தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டன.

2g case - updatenews360

இது தொடர்பான வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, சி.பி.ஐ. தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர், இது பொதுநலன் சார்ந்த வழக்கு என்பதால் உடனடியாக விசாரணை தேவை எனக் கூறினார். இதனை ஏற்றுக் கொண்ட டெல்லி உயர்நீதிமன்றம், வரும் அக்டோபர் 5ம் தேதி முதல் தொடர் விசாரணை நடைபெறும் தெரிவித்துள்ளது.

அதன்படி, 2ஜி வழக்கின் மேல்முறையீட்டு மனு இன்று முதல் விசாரணைக்கு வருகிறது. பிற்பகல் 2.30 மணியளவில் முதலில் சி.பி.ஐ.யின் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிகிறது. இந்த வழக்கின் தீர்ப்பு வரும் நவம்பர் மாதத்திற்குள் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இது தி.மு.க. எம்.பி.க்கள். கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்டோருக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 51

0

0