சாலை தடுப்பில் ஷேர் ஆட்டோ மோதி கோரவிபத்து: புதுமாப்பிள்ளை உள்பட 3 பேர் பலி..!!

Author: Aarthi Sivakumar
22 September 2021, 8:37 am
Quick Share

சென்னை: தாம்பரம் அருகே இரும்பலியூரில் சிக்னல் பகுதியில் சாலை தடுப்பில் ஷேர்ஆட்டோ மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்தனர்.

சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து பெருங்களத்தூருக்கு ஷேர் ஆட்டோ ஒன்று பயணிகள் 9 பேரை ஏற்றி கொண்டு தாம்பரத்தில் இருந்து இரும்புலியூர் சிக்னல் அருகே சென்று கொண்டிருக்கும்போது, சிக்னலில் ஆம்னி பேருந்து ஒன்று நின்று கொண்டு இருந்தது.

ஆம்னி பேருந்து மீது மோதாமல் இருப்பதற்காக ஆட்டோ ஸ்டேரிங்கை ஓட்டுநர் திருப்பியபோது, அதிவேகமாக சென்ற ஆட்டோ சாலையின் நடுவே தடுப்பு சுவரில் மோதி எதிர்திசையில் ஜிஎஸ்டி சாலையில் ஆட்டோ கவிழ்ந்தது. அப்போது பெருங்களத்தூரில் இருந்து தாம்பரம் நோக்கி வந்த லாரி ஷேர் ஆட்டோவின் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் ஆட்டோவில் இருந்த கடலூரை சேர்ந்த ஐசக் ராஜ், கொளப்பாக்கத்தை சேர்ந்த சுந்தர்ராஜ், பாண்டிசேரியை சேர்ந்த நாகமுத்து ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் பலத்த காயமடைந்தனர். மேலும் 2 பேர் லேசனாக காயங்களுடன் உயிர் தப்பினர். இது குறித்து தகவல் அறிந்த குரோம்பேட்டை போக்குவரத்து போலீசார் காயமடைந்த நபர்களை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

பாண்டிசேரியை சேர்ந்த நாகமுத்துவிற்கு அடுத்த மாதம் திருமணம் நிச்சயக்கப்பட்டிருந்த நிலையில் அவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ஷேர் ஆட்டோவை ஓட்டி வந்த ஓட்டுனர் விபத்தில் இருந்து தப்பிக்க ஆட்டோவில் இருந்து குதித்து தப்பி ஓடியுள்ளார். தலைமறைவான ஆட்டோ ஓட்டுநர் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Views: - 176

0

0