திருப்பூர், ஈரோடு உள்பட 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Author: Babu
8 October 2020, 1:59 pm
rainy-updatenews360
Quick Share

சென்னை : திருப்பூர், ஈரோடு உள்பட 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது : வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக, அக்.,9ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி அந்தமான் ஒட்டியுள்ள பகுதிகளில் உருவாகக் கூடும் என்பதால், அடுத்த 48 மணிநேரத்திற்கு 11 மாவட்டங்களில் கனமழையும், 6 மாவட்டங்களில் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவாரூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தஞ்சை, நாகை ஆகிய மாவட்டங்களில் கனமழையும், திருப்பூர், சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழையும் பெய்யும்.

சென்னையை பொறுத்தவரையில் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மத்திய வங்கக்கடல், வடக்கு அந்தமான் கடல் பகுதிகள், ஆந்திர கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம், எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 63

0

0