எனக்கு அந்த தகுதி இல்லையா…? குஷ்புவை தொடர்ந்து பாஜகவுக்கு தாவும் மற்றொரு 90s நடிகை…? அதிர்ச்சியில் காங்கிரஸ் தலைவர்கள்!!

Author: Babu Lakshmanan
30 May 2022, 1:37 pm
bjp - congress - updatenews360
Quick Share

மாநிலங்களவை தேர்தலில் பேட்டியிட தனக்கு வாய்ப்பு அளிக்கப்படாதது குறித்து நடிகையும், காங்கிரஸ் கட்சியின் மூத்த பெண் தலைவருமான ஒருவர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் 57 எம்.பிக்களின் பதவிக்காலம் விரைவில் முடிவடிகிறது. இதனால் காலியாகும் இடங்களுக்கு வரும் 10-ம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்து விட்டது.இதனை தொடர்ந்து, மாநிலங்களவை தேர்தலுக்காக பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து விட்டன.

அந்த வகையில், மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் 10 வேட்பாளர்களின் பட்டியலை காங்கிரஸ் நேற்று வெளியிட்டது. இந்த அறிவிப்பு மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. ஏனெனில், மகாராஷ்டிராவில் இருக்கும் காங்கிரஸ் தலைவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாமல், உத்தரபிரதேசத்தை சேர்ந்த இம்ரான் பிரதாப் கார்கி மராட்டிய மாநிலத்தில் இருந்து போட்டியிடுவார் என காங்கிரஸ் அறிவித்ததுதான்.

குறிப்பாக, மகாராஷ்டிராவில் இருந்து இம்ரான் மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சியின் மகளிரணி பிரிவான மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளரும், நடிகையுமான நக்மா வெளிப்படையாகவே தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.

Nagma Corona -Updatenews360

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘2003-04ல் தான் காங்கிரஸில் இணைந்தபோது, நாங்கள் ஆட்சியில் இல்லை என்றும், அப்போது தலைவர் சோனியா காந்தி, தன்னை ராஜ்ய சபாவில் தேர்ந்தெடுப்பதாக தனிப்பட்ட முறையில் என்னிடம் உறுதியளித்திருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது, கட்சியில் இணைந்து 18 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில், இன்னும் ஒருமுறை கூட வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றும், ஆனால் மஹாராஷ்டிரா மாநிலங்களவையில் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த இம்ரானுக்கு இடமளிக்கப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், நான் என்ன குறைவான தகுதியுடையவளா.. ?’ என்று பதிவிட்டுள்ளார்.

நக்மாவின் இந்த ட்விட்டர் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், ஒரு சில காங்கிரஸ் கட்சியினர் விட்டுக் கொடுத்து போகலாமே என்னும், மற்றொரு தரப்பினர் நக்மா கேட்பது நியாயம்தானே..? என்றும் முனுமனுத்து வருகின்றனர்.

Kushbu_UpdateNews360

இதனிடையே, காங்கிரஸ் மீதான அதிருப்தயால், நக்மா பாஜகவில் சேரப்போவதாக தகவல்களும் வெளியாகி உள்ளது. ஏற்கனவே, காங்கிரஸ் கட்சியின் மீதான அதிருப்தியில் நடிகை குஷ்பு பாஜகவில் இணைந்தார். தற்போது, அவரைத் தொடர்ந்து, மற்றொரு நடிகையும் பாஜகவுக்க தாவ இருப்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 579

0

0