பாஜகவுக்கு தாவும் கோவையை சேர்ந்த பிரபல அரசியல் பிரமுகர்… இன்று மாலைக்குள் தெரிந்துவிடும் : அண்ணாமலை சஸ்பென்ஸ்!

Author: Udayachandran RadhaKrishnan
26 February 2024, 8:58 am

பாஜகவுக்கு தாவும் கோவையை சேர்ந்த பிரபல அரசியல் பிரமுகர்… இன்று மாலைக்குள் தெரிந்துவிடும் : அண்ணாமலை சஸ்பென்ஸ்!

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, விளவங்கோடு எம்எல்ஏ விஜயதரணி போன்று கோயம்புத்தூரில் முக்கிய விக்கெட் விழப்போகிறது

போதைப்பொருள் கடத்தலில் திமுக மற்றும் விசிக நிர்வாகிகள் இருப்பது தெரியவந்துள்ளது .ஜாபர் சாதிக் திமுக தலைவர் மு க ஸ்டாலின் தொடங்கி உதயநிதி ஸ்டாலின் வரை அவரது குடும்பத்திற்குள் தயாரிப்பாளராக தமிழகத்தின் டிஜிபியின் கையிலயே கேடயம் விருதுவாங்கியுள்ளார்.

2000 கோடி ரூபாய் மதிப்பு போதை பொருள் கடத்தி பிடிபட்டிருக்கிறார்கள் என்றால் அந்த பணம்தான் இவர்கள் தயாரிக்கும் பணம் நிறுவனத்திற்கு கூட செல்கின்றதா என்ற சந்தேகம் வருகிறது.

திமுக முதலமைச்சரின் குடும்பம் சினிமாவில் திரைப்படங்களை வெளியிட்டுவருகிறது. தற்போது அவசரமாக கட்சியிலிருந்து டிஸ்மிஸ் செய்திருக்கிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கஞ்சா பழக்கம் அதிகரித்து வந்துள்ளது 2000 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பிடிபட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு இருக்கிறதா என்ற கேள்வி எழுந்தது போதை பொருள் கடத்தல் கும்பல் தலைவன் எப்படி டிஜிபியிடம் விருது வாங்க முடியும்

இது தொடர்பாக முதலமைச்சர் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் டெல்லி காவல் துறையினருக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்

இந்த கும்பல் குறித்து விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும்
முதலமைச்சர் இது தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்பது பாஜகவின் கோரிக்கை.

232 தொகுதிகளில் என் மண் எண் மக்கள் யாத்திரை நிறைவு பெற்றிருக்கிறது. நாளை பல்லடத்தில் நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார் மதுரை நெல்லை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் விழா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

2024 இன்று பாராளுமன்ற தேர்தலில் இதன் தாக்கம் இருக்கும் அது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. நாளை மாலை 5 மணிக்கு பல்வேறு எதிர்பார்ப்புகள் உள்ளது பெரிய பிக்சாட்டுகள் உள்ளது.

தொண்டர்களை கஷ்டப்பட்டு அதிமுகவினர் வலை போட்டு சேர்க்கின்றனர் ஆனால் நாங்கள் தலைவர்களை இழக்கிறோம் அண்ணாமலைக்கு வாய் கொழுப்பு கொஞ்சம் அதிகம் தான் உள்ளது அதனை குறைப்பதற்கு செல்லூர்ராஜூவிடம் சொல்லுங்கள்.

கூட்டணி பங்கீடு குறித்து திமுக பேசிவருவது என்பது திமுக WARM UP பண்ணிக் கொண்டிருக்கிறது வாக்கு எண்ணிக்கையின் போது வெற்றியாளர் யார் என்பது தெரியும்.நோட்டு பெட்டிக்கும் ஓட்டு பெட்டிக்கும் சீமான் அண்ணன் சுற்றுவது போல தெரிகிறது .

மத்திய நிதி அமைச்சரின் வார்த்தைகளில் எந்த தவறும் இல்லை சில மனிதர்களுக்கு கொழுப்பு அதிகமாக இருக்கும் போது எங்களது பாஷைகளும் அதன் பெயரிலே இருக்கும்.

முதலில் கொங்கு பகுதி தமிழனாக இருந்தேன் அரசியலுக்கு வந்து விட்டால் அது வேலைக்கு ஆகாது. சிலர் மனம் கனத்தோடு மூளை கனத்தோடும் இருக்கிறார்கள் தெர்மாகோல் விஞ்ஞானிகள் எல்லாம் தற்பொழுது நமக்கு அட்வைஸ் கொடுக்கிறார்கள்

சிலருக்கு அவர்களது பாஷையில் பதில் அளிக்க வேண்டிய நிலை உள்ளது நிர்மலா சீதாராமன் சில இடங்களில் இது போன்று பேச வேண்டியது உள்ளது.

மோசமான அரசியல்வாதிகளை அவரது பாசையில் திரும்பிக் கொடுத்தால் மட்டும்தான் இந்த அரசியல் சாக்கடை மாறும் என வந்துவிட்டேன்.

எந்த வார்த்தையில் பேசுகிறார்களோ அதே மாதிரியே என்னுடைய பதிலும் இருக்கும். கூட்டணி குறித்து நாளை பாரத பிரதமர் நிகழ்வு நடைபெறும்போது பார்க்க இருக்கிறீர்கள் பிரதமரின் கரத்தை யாரெல்லாம் வலுப்படுத்த நினைக்கிறார்களோ எல்லோரையும் வரவேற்கிறோம்

தமிழகத்தின் சாக்கடை அரசியலில் இருந்து வெளியே வரவேண்டும் என நினைக்கிறேன் பொறுத்திருந்து பாருங்கள் பெரிய கூட்டணி இருக்கும் பெரிய மாற்றத்திற்கான அமைப்பாக இருக்கும்.

மோடி மூன்றாவது முறையாக ஆட்சியில் இருக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு. 2024 தேர்தலுக்கான மாற்றம் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலுக்கானதாக இருக்கும், தேர்தல் முடிந்து தமிழகத்தில் திமுக ஆட்சி வேன்டெக் ஆட்சியாக நடைபெறும்.

பாஜக 400 சீட்டுகளை கடந்து மோடி வரும்போது தமிழகத்தில் பாஜகவில் பெரும்பான்மையான எம்பிக்கள் இருக்க வேண்டும் என நினைக்கிறேன். அதில் எந்த மாற்றமும் இல்லை

டிஎம்கே பைல்ஸ் நாலு பார்ட் வந்துள்ளது இப்போதுதானே களம் சூடு பிடிக்கிறது. 45 நாள் எங்கள் உழைப்பு மிகப்பெரிய சூறாவளியாக இருக்கும் எல்லா உழைப்பையும் போட்டு விட்டோம் நாளை மாலை 5 மணிக்கு கோயம்புத்தூரில் என்ன நடக்கிறது என பாருங்கள்? என்றார்.

  • ajith kumar talking about quit cinema in interview after lonng time சினிமாவுக்கு டாட்டா! எப்போவேணாலும் நடக்கலாம்? பேட்டியில் அதிர்ச்சியை கிளப்பிய அஜித்…