பாஜக ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமைத் தொகை பறிபோகும் : திமுக எம்பி கனிமொழி பரபரப்பு பேச்சு!!

Author: Udayachandran RadhaKrishnan
26 February 2024, 8:24 am
Kanimozhi mp
Quick Share

பாஜக ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமைத் தொகை பறிபோகும் : திமுக எம்பி கனிமொழி பரபரப்பு பேச்சு!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் திமுக மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்பி கனிமொழி கலந்துகொண்டு உரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், மத்தியில் ஆளும் பாஜக அரசு 20,000 கோடி ரூபாய் ஜிஎஸ்டி பாக்கி தொகையை தமிழகத்திற்கு தர வேண்டி இருக்கிறது. வெள்ள நிவாரண தொகை என எதையும் தருவதில்லை. தமிழகத்திற்கு வழங்கப்படும் திட்டங்களை குறைத்துக் கொண்டே வருகின்றனர்.

ஏற்கனவே, 100 நாள் வேலை திட்டத்திற்கு போதிய நிதியை தமிழகத்திற்கு கொடுப்பதில்லை. அந்த நிதியானது ஆண்டு தோறும் குறைந்து கொண்டே வருகிறது.

மீண்டும் இதே போல் பாஜக ஆட்சிக்கு வந்தால், ஏற்கனவே நாம் கொடுக்கப்படும் மகளிர் தொகை தொகை ஆயிரம் ரூபாய் என்பது நிறுத்தப்படும் சூழல் உருவாகும் என்று தெரிவித்தார்.

மேலும், திமுக வெற்றி என்பது அனைவரையும் பாதுகாக்க கூடிய வெற்றியாகும் என்றும் கனிமொழி பேசினார். அடுத்ததாக, இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக மருத்துவ கல்லூரிகள் உள்ளது. அதனை ஒழிக்க தான் நீட் எனும் பொது தேர்வை கொண்டு வந்து, ஏழை மக்களின் மருத்துவ கனவை ஒழிக்கபார்க்கிறார்கள். புதிய கல்வி கொள்கை மூலம் அனைத்து கல்லூரிகளுக்கும் நுழைவுத் தேர்வு கொண்டு வர துடிக்கிறார்கள் என்றும் பாஜக அரசு மீது பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்து திமுக எம்பி கனிமொழி பேசினார்.

Views: - 139

0

0