‘எல்லாம் விஜய்யின் முடிவுதான்’… காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் நடிகர் விஜய்யின் தாயார் பேட்டி!!

Author: Babu Lakshmanan
27 December 2022, 10:08 am

நடிகர் விஜயின் தாயார் ஷோபா சந்திரசேகர் உலக பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில், வாரிசு திரைப்படம் வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜை செய்து வழிபட்டார்.

தமிழ் சினிமா துறையில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இளைய தளபதி என ரசிகர்களால் அழைக்கப்படும் விஜய், தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் தில்ராஜூ தயாரிப்பில் இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் அடுத்த மாதம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது.

வாரிசு திரைப்படம் விஜய் ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், திரைப்பட நடிகர் விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் உலக பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு வருகை தந்தார். அங்கு, உலக மக்கள் நன்மை பெற வேண்டியும், விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் வெற்றி பெற வேண்டியும், காமாட்சி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து சுவாமி தரிசனம் செய்து வழிபாடு நடத்தினார்.

காமாட்சி அம்மனை தரிசனம் செய்த பின்னர், கோவில் நிர்வாகம் அளித்த பிரசாதங்களை பெற்றுக் கொண்டு ஷோபா சந்திரசேகர் திரும்பி சென்றார்.

அப்போது, செய்தியாளர்களை சந்தித்த அவர், அனைவரையும் போல சுவாமி கும்பிடவே கோவிலுக்கு வந்ததாகவும், விஜய் படம் வெற்றி பெற அனைவரும் வேண்டிக் கொள்ளுமாறு கூறினார். தொடர்ந்து, விஜய்யின் வாரிசு படம் மற்றும் அவரது அடுத்த படம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, அது பற்றி எல்லாம் தனக்கு தெரியாது என்று அவர் பதில் தெரிவித்தார்.

மேலும், விஜய் அரசியலுக்கு வருவது குறித்து கேள்வி எழுப்பியதற்கு, “எல்லாம் அவரது முடிவுதான் என்றும், நானும், அவரது தந்தை எஸ்.ஏ.சி.யும் எந்த விஷயத்துலயும் தலையிடுவதில்லை என்று கூறிவிட்ட சென்றார் ஷோபா சந்திரசேகர்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?