அடிப்படை ஒழுக்கங்களையாவது கற்றுக்கொள்ளுங்க… நடிகை த்ரிஷாவுக்கு ஆதரவாக கொதித்தெழுந்த நடிகர் விஷால்…!!

Author: Babu Lakshmanan
21 February 2024, 9:51 am
Quick Share

நடிகை த்ரிஷா குறித்து அவதூறாக பேசிய அதிமுக முன்னாள் நிர்வாகி ஏவி ராஜுவுக்கு நடிகர் சங்கத் தலைவரும், நடிகருமான விஷால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதிமுக முன்னாள் நிர்வாகி ஏவி ராஜு, தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை த்ரிஷா குறித்து அவதூறாக பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.கூவத்தூரில் எம்எல்ஏக்கள் தங்கியிருந்த எம்எல்ஏ வெங்கடாசலம், நடிகை திரிஷா தான் வேண்டும் என்று அடம்பிடித்தார் என்றும், நடிகரும், முன்னாள் எம்எல்ஏவுமான கர்ணாஸ் தான் அங்கே நடிகைகளை வரவழைக்க ஏற்பாடு செய்தார் என்றும் ஏவி ராஜு கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

Trisha_Krishnan

முன்னாள் அதிமுக நிர்வாகி ஏவி ராஜுவின் இந்தப் பேச்சுக்கு பல்வேறு திரையுலக பிரபலங்கள் மற்றும் பெப்சி சங்கமும் கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தது.

தன்னைப் பற்றி அவதூறாக பேசிய முன்னாள் அதிமுக பிரமுகர் ஏவி ராஜு மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நடிகை த்ரிஷா தெரிவித்துள்ளார். கவனம் ஈப்பதற்காக எந்த அளவுக்கும் கீழே இறங்கக் கூடிய நபர்களை பார்ப்பதற்கே அருவருப்பாக உள்ளதாகவும் அவர் கூறியிருந்தார்.

இதனிடையே, தன்னுடைய பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகவும், த்ரிஷாவை பற்றி பேச தனக்கு தகுதியில்லை என்று கூறி சர்ச்சையில் சிக்கிய ஏவி ராஜு மன்னிப்பு கேட்டிருந்தார். இந்த நிலையில், நடிகை த்ரிஷா குறித்து அவதூறாக பேசிய அதிமுக முன்னாள் நிர்வாகி ஏவி ராஜுவுக்கு நடிகர் சங்கத் தலைவரும், நடிகருமான விஷால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக X தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது :- அரசியல் கட்சியைச் சேர்ந்த ஒருவர் திரையுலகைச் சேர்ந்த ஒருவரைப் பற்றி மிகவும் கேவலமாக பேசியதாகக் கேள்விப்பட்டேன். உங்கள் பெயரையோ, நீங்கள் குறிவைத்த நபரின் பெயரையோ சொல்ல மாட்டேன். ஏனென்றால் நீங்கள் விளம்பரத்திற்காக இதைச் செய்தீர்கள் என்பது எனக்குத் தெரியும்.

உங்களுக்கு மனசாட்சி இல்லாவிட்டாலும், நீங்கள் செய்த காரியத்திற்குப் பிறகு, உங்கள் வீட்டில் உள்ள பெண்கள் உங்களுக்கு சிறப்பான வரவேற்பை அளிப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.

பூமியில் இருக்கும் இத்தகைய தீய சக்திக்கு பதிலடி கொடுக்க ஒரு ட்வீட் போடுவது எனக்கு உண்மையிலேயே வேதனை அளிக்கிறது. நீங்கள் செய்தது முற்றிலும் தகுதியற்றது. உண்மையைச் சொன்னால், நான் உங்களைக் கண்டிக்க விரும்பவில்லை. ஆனால் நீங்கள் இதற்கான தண்டனை அனுபவிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

ஒருமுறை நடிகர் சங்க பொதுச்செயலாளர் என்ற முறையில் இந்த அறிக்கையை வெளியிட விரும்பவில்லை. ஆனால் பூமியில் உங்களால் முடிந்தவரை ஒரு மனிதனாக நீங்கள் ஒருபோதும் இருக்க முடியாது. நிச்சயமாக, இது பிரபலங்களைப் பற்றிய எதிர்மறையான விளம்பரத்தில் பணம் சம்பாதிக்க முயற்சிக்கும் ஒரு போக்காக மாறிவிட்டது. குறைந்த பட்சம் சில அடிப்படை ஒழுக்கங்களையாவது கற்றுக்கொள்ளுங்கள், எனக் கூறினார்.

Views: - 226

0

0