அதிமுகவின் இறுதி கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. விளவங்கோடு இடைத்தேர்தலுக்கான வேட்பாளரும் அறிவிப்பு

Author: Babu Lakshmanan
21 March 2024, 11:41 am

அதிமுக 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. குறிப்பாக, திமுக போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்து விட்டது. பாஜகவோ, கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது.

அதேவேளையில், புதிய தமிழகம், எஸ்டிபிஐ, புதிய பாரதம், தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் அதிமுக கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க இருக்கிறது. தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நிறைவடைந்த நிலையில், 16 தொகுதிகளுக்கான அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், அதிமுக 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக ராணி அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை – கலிய பெருமாள்
கள்ளக்குறிச்சி – குமரகுரு
திருப்பூர் – அருணாச்சலம்
நீலகிரி – லோகேஷ்
கோவை – சிங்கை ஜி ராமச்சந்திரன்
பொள்ளாச்சி – அப்புசாமி (எ) கார்த்திகேயன்

திருச்சி – கருப்பையா
ஸ்ரீபெரும்புதூர் – பிரேம்குமார்
வேலூர் – பசுபதி
தருமபுரி – அசோகன்
நெல்லை – சிம்லா முத்துச்சோழன்

தூத்துக்குடி – சிவசாமி வேலுமணி
சிவங்கை – பணகுடி சேவியர்தாஸ்
மயிலாடுதுறை – பாபு
பெரம்பலூர் – சந்திரமோகன்
கன்னியாகுமரி – நசரேத் பசிலியான்
புதுச்சேரி – தமிழ்வேந்தன்

  • vijay does not come out after 6 o clock said by suriya siva 6 மணிக்கு மேல விஜய் வெளில வரமாட்டார்; இதுதான் ரகசியம்- வம்பிழுத்த அரசியல் பிரபலம்