தோளில் துண்டு… பக்கத்தில் கரும்பு.. விவசாயி கெட்டப்பில் தொண்டர்களுக்கு மத்தியில் டிராக்டரை ஓட்டி வந்த இபிஎஸ்..!!

Author: Babu Lakshmanan
5 February 2024, 2:59 pm

அரூரில் அலங்கரிக்கப்பட்ட டிராக்டர்களில் உழவு கருவிகளுடன் நடைபெறும் உழவர்கள் பேரணியை தொடங்கி வைத்து டிராக்டரை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஓட்டி வந்தார்.

தருமபுரி மாவட்டம் அரூரில் கொங்கு பல்நோக்கு பயிற்சியகம் கொங்கு இளைஞர்களுக்கு அர்ப்பணிக்கும் பெருவிழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

உழவு கருவிகளுடன் நடக்கும் உழவர்களின் பேரணியை அலங்கரிக்கப்பட்ட டிராக்டரை ஓட்டி வந்து தொடங்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து, நிகழ்ச்சியில் வெள்ளி வேல் அவருக்கு பரிசாக வழங்கப்பட்டது. பின்னர், கொங்கு பல்நோக்கு பயிற்சி ஆலயத்தை திறந்து வைத்தார்.

இந்த விழாவில் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, எஸ்.பி. வேலுமணி, கே.சி. கருப்பண்ணன், கே.பி.அன்பழகன் ஆகியோரும் கலந்து கொண்டு விழாவில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?