வெறும் வாய்சவுடால் விட்டு தப்பிக்க அமைச்சர்கள் முயற்சி… மக்கள் தண்டனையில் இருந்து தப்ப முடியாது  ; ஆர்பி உதயகுமார் பதிலடி!!

Author: Babu Lakshmanan
12 December 2023, 11:58 am
Quick Share

எடப்பாடியார் ஒரு ஜனநாயக கடமை ஆற்றுவதில் என்ன தவறு இருக்கிறது? என்றும், அமைச்சர்கள் வாய் சவுடாலாக பேசி தப்பித்து, திசை திருப்பி, எங்கள் மீது பழி சுமத்தி  இயலாமையை மறைக்க முயற்சிப்பதாக சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.  

இது தொடர்பாக அவர் கூறியதாவது :- கொட்டுகிற மழையிலே கோட்டை விட்ட ஆளுகிற திமுக அரசு அதனுடைய பொறுப்பையும், கடமையும் மறந்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தையும், பொதுச்செயலாளர் எடப்பாடியாரை விமர்சனம் கொண்டிருப்பதை பார்த்து, இப்போது மக்களிடத்திலே இந்த அரசின் மீது கடும் கோபமாக மாறி இருக்கிறது. அரசு எதிர்க்கட்சியை விமர்சனம் செய்வதை விட்டுவிட்டு கடமைகளை பொறுப்போடு செய்ய வேண்டும் என்பதை தமிழ்நாட்டு மக்கள் எதிர்பார்க்கின்றார்கள்.

இன்றைய முதலமைச்சர் அன்றைக்கு எதிர்க்கட்சித் தலைவராக இருந்த பொழுது எதிர்க்கட்சி அரசியல் தான் செய்யும், அவியலா செய்யும் என்று குறுப்பிட்டார். தற்போது எல்லாவற்றிலும் அரசியல் பண்றாங்க என்று சொல்லுகிறார். அப்படியானால் எதிர்க்கட்சிகளின் சுட்டிக்காட்டுகிற அந்த கடமையை கூட ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு மனநிலையில் ஸ்டாலின் இல்லை. அமைச்சர தங்கம் தென்னரசு அதிமுக ஆட்சியில் வெள்ளம் ஏற்பட்டபோது, அமைச்சர்கள் இங்கே செல்லவில்லை. அங்கே செல்லவில்லை கூறுகிறார்.

2015 சென்னையில் வெள்ளம் பாதிக்கப்பட்டபோது, ஸ்டாலின் பாதுகாப்பாக கேரளாவில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார் என்று அந்த செய்தி வந்ததை கூட மறந்துவிட்டார். சிகிச்சைக்காக கேரளாவில் மூலிகை சிகிச்சைக்காக சென்றிருந்த திமுகவின் பொருளாளர் ஸ்டாலின் மழை நின்றுவிட்டது என்று தெரிந்தபிறகு தான் தமிழகத்தின் திரும்பினார் என்று அன்றைக்கு செய்திகள் எல்லாம் வெளிவந்தன. 

சுனாமி வந்த அடுத்த நிமிடமே அம்மா கடற்கரையிலே இறங்கி நின்று, எந்த நிமிடம் வேண்டாலும் சுனாமி பேரலை வரலாம் என்று சொல்லுகிற போது, உயிரை பணயம் வைத்து பணிகளை மேற்கொண்ட போது, கலைஞர் ஆறாவது மாடியிலே சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்பது இந்த நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும். 

அதேபோல், எடப்பாடியார் முதலமைச்சராக இருந்த பொழுது நேரிலே வந்து 32 வருவாய் மாவட்டங்களிலும் நேரடியாக தொடர்பு கொண்டு, செம்பரபாக்கம், பூண்டி போன்ற நீர் நிலைகளின் கள நிலவரம் அறிந்து,  நேரில் கண்டறிந்து களத்தில் நின்று போராடினார். ஆனால் இவர்கள் எங்கே சென்று எதிர்கொண்டார்கள். இவர்களின் கையாலத்தனத்தை கண்டு சிரியாய், சிரித்து வருகிறார்கள். மக்களிடத்தில் இதை மறைப்பதற்காக வரலாற்றை திரித்து கூறுகிறார்கள்.

அமைச்சர் மாசு அதிமுகவிற்கு சொல்ல தகுதி இல்லை என கூறுகிறார். ஸ்டாலின் சென்னை மேயராக இருந்தார், அதனை தொடர்ந்து உள்ளாட்சி துறை அமைச்சர், துணை முதலமைச்சர் அவருக்கு பிறகு மாசு மேயராக இருந்தார். உங்களுக்கு மக்கள் மீது அக்கறை இருந்தால் உங்க யோக்கியதை இந்த மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், அன்றைக்கே நீங்கள் வெள்ள தணிப்பு நடவடிக்கைகளுக்கு ஒரு துரும்பை கூட நீங்கள் எடுத்துப் போடவில்லை. இதை சவாலாகவே நான் சொல்கிறேன் .

எடப்பாடியார் மீட்பு நடவடிக்கை நிவாரணம், இதோடு முதன்முதலாக வெள்ளதடுப்பு நடவடிக்கை மேற்கொண்டார். இது போன்ற காலங்களில் எதையும் செய்யாமல் எதிர்க்கட்சியாக இருந்த பொழுது ஓடி ஒளிந்து விட்டு, இப்போது வீர வசனம் பேசக்கூடாது. அமைச்சர் மா.சு பதவி இலக்கணத்தோடு நீங்கள் பேசுங்கள். அதில், அநாகரிக பேச்சு இருக்கக் கூடாது.

இயலாமையை மறைத்து நீங்கள் விடும் பேச்சு பகல் கனவாக தான் இருக்கும். எதிர்க்கட்சிகள் என்பது இந்த  அரசு செய்திருக்கிற நடவடிக்கையை,  நிலையை, தரத்தை, யோக்கியதை தகுதியை மக்களிடத்தில் தோலுரித்துக் காட்டத்தான் செய்வார். அதுக்கு தான் மக்கள் வாக்களித்து இருக்கிறார்கள். நீங்கள் எதிர் கட்சியாக இருந்தபோது வேண்டுமானால் உங்கள் கடமையை நீங்கள் மறந்திருக்கலாம்.

எடப்பாடியார் முதலமைச்சராக இருக்கும் போது கஜா புயலில் இரவு முழுவதும் கண்விழித்து, மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்திலே மேற்கொண்ட பணியினால் சவால் விடுத்து சொல்கிறேன், ஒரு உயிரிழப்பு கூட மீனவர்கள் ஏற்படாமல் தடுத்துக் காட்டினார்.

2011ல் இருந்து சுனாமியில் இருந்து தானே புயல், ஒக்கி புயல், நீளம் புயல், வர்தா புயல், கஜா புயல், நிவர் புயல் வரை பல புயலிலே மக்களை மீட்டெடுத்து, இன்றைக்கு 2015  மழையை எல்லோரும் ஒப்பிட்டு பார்க்கிறார்களே? அன்றைக்கு அம்மா முதலமைச்சராக இல்லாமல் இருந்திருந்தால், தலைநகர் சென்னை தமிழ்நாட்டின் வரைபடத்தில் இல்லாமல் போயிருக்கும். இதை நான் மிகைப்படுத்தி நான் சொல்லவில்லை, அரசியலுக்காக நான் சொல்லவில்லை, எங்களுக்கும் பொறுப்பும் கடமை உண்டு. 

இந்த வெள்ளத்தை கையாளாகாத காரணத்தினாலே  இந்த அரசு தோல்வி அடைந்த காரணத்தினால், அதை மீட்க வேண்டிய நடவடிக்கைகளை அரசு ஈடுபட வேண்டும் என்று சொல்கிறோம், அண்ணா கூறியது போல ஆளுங்கட்சி என்பது உலையில் உள்ள அரிசி போன்றது, எதிர்க்கட்சிக்கு என்பது அந்த அரிசியை பதம் பார்க்கும் அகப்பையாக இருக்க வேண்டும், அதை ஏற்றுக்கொள்ள உங்களுக்கு மனம் இல்லையா? இன்றைக்கு ஒரு நடிகரை பிடித்து அன்றைக்கு பேரிடர் வந்தபோது ஒரு பேச்சு, இன்றைக்கு ஒரு பேச்சு என  ஒரு ஊதுகுலாக வைத்து கொண்டு அதை மக்களிடத்தில் மறைத்து விட முடியும்  நினைக்கிறார்கள். இதனால் மக்கள் வேதனைப்படுகிறார்கள், இது விளம்பரத்துக்காக தான் ஒரு விளம்பர அரசியல் செய்கிறது அரசு.

நீங்கள் எப்படி கையாண்டு இருக்கிறீர்கள் என்பதை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் உங்கள் கவனத்திற்கு சொல்வதில் ஒரு ஜனநாயக கடமை ஆற்றுவதில் என்ன தவறு இருக்கிறது? அதற்கு நாகரிகம் இல்லாமல் அநாகரிகமாக பேசுவது தான் இந்த திராவிட மாடல் ஆட்சியின் இலக்கணமா?

அமைச்சர் தங்கம் தென்னரசு இப்படி பேசுவது என்பது இதுவரை நாம் பார்த்ததில்லை? யார் கொடுத்த அழுத்தத்தினால் பேசினார் என்று தெரியவில்லை. 2015 ஆம் ஆண்டு புயல் வந்த பொழுது அதனை தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு தேர்தல் பொது தேர்தலில் பழி சுமத்தினார்கள். ஆனால் மீண்டும் அம்மா ஆட்சி கட்டிலில் அமர்த்தி, நியாயமாக மக்களை காப்பாற்றியதன் அடிப்படையில் தானே மக்கள் மீண்டும் தீர்ப்பு வழங்கினார்கள். 

உங்களுடைய இயலாமையை நீங்கள் நியாயப்படுத்துவதற்காக எங்கள் மீது எத்தனை முறை சுமத்துவீர்கள்? ஆளும் கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும், அண்ணா திமுக தான் காரணம் என்கிறீர்கள். இன்றைக்கு சென்னையே குளம் போல காட்சி அளிக்கிறது. சென்னையில் உள்ள கால்வாயில் நீங்கள் தண்ணீர் போவதற்கு என்ன நடவடிக்கை எடுத்தது உங்களால் சொல்ல முடியுமா ?

சென்னை மழை நீர் வடிகால் பணிக்கு 4000 கோடி செலவு செய்யப்பட்டதாக நீங்கள் சொன்னீர்கள். அதனை தொடர்ந்து அமைச்சர் நேரு 5120 கோடி என்று கூறுகிறார். முதலில் 95% பணியை முடித்துவிட்டு என்று கூறிவிட்டு தற்போது 2000 கோடிக்கு மேல் பணிகள் செய்யப்பட்டது என்று கூறுகிறார்கள் யார் சொல்வதை மக்கள் நம்புவது?முதலமைச்சர் முதல் எல்லா அமைச்சர்களும் என்ன சொன்னீர்கள்? ஒரு சொட்டு தண்ணீர் நிக்காது. எவ்வளவு பெரிய மழை வந்தால் என்று சொன்னீர்களா இல்லையா? இப்படித்தான் அரசு முன்னெச்சரிக்கையாக அறிவிப்பு மக்களுக்கு கொடுப்பார்களா? 

எவ்வளவு மழை வருகிறது என்று இந்திய மாநில ஆய்வு மையம் சொல்கிறது. சூறாவளி காற்று வீசுவது என்று சொல்லுகிறது. ஆனால் முதலமைச்சரும் எல்லாம் அமைச்சர்களும் செய்த குற்றம் என்ன? இப்போது நீங்கள் செய்த குற்றத்திற்கு மக்கள் பாதிக்கப்பட்டதற்கும், மக்கள் உயிரிழந்ததற்கு மக்கள் உங்களை தூக்கில் போடுவார்களா? மக்கள் உங்களை தண்டிப்பார்கள்.

வாய் சவுடால் வைத்து தப்பித்துக் கொள்ளலாம், நியாயப்படுத்தலாம், திசை திருப்பலாம், மறைக்கலாம், எங்கள் மீது பழி சுமத்தலாம், உங்கள் இயலாமையை மறைக்கலாம், ஆனால் நிச்சயமாக மக்கள் தண்டனையில் இருந்து தப்ப முடியாது என்பதை ஸ்டாலினும், மா.சு, தங்கம் தென்னரசு,  கமலஹாசன் போன்றவர்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதை இந்த நேரத்தில் எச்சரிக்கையோடு சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

அரசு எதிர்க்கட்சித் தலைவர் ஒரு கருத்தை முன்வைக்கிறார் என்று சொன்னால், அதை ஏற்றுக் கொண்டு இந்த அரசு சீர்படுத்த வேண்டும், செயல்படுத்த வேண்டும், செம்மைப்படுத்த வேண்டும். உங்களுடைய அடாவடித்தனத்தையும், ரவுடித்தனத்தையும் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இது போன்ற வீர வசனங்களை நிறுத்திவிட்டு உண்மையிலே களத்தில் இறங்கி  மக்களை காப்பாற்றுங்கள், என கூறினார்.

Views: - 253

0

0