தமிழக சட்டப்பேரவையில் இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல்: அமைச்சர் பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்..!!

Author: Rajesh
19 March 2022, 9:29 am
Quick Share

சென்னை: தமிழக சட்டசபையில் இன்று வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்.

தமிழக சட்டசபையில் நேற்று காலை 10 மணிக்கு நிதியமைச்சர் தியாகராஜன் 2022 – 23ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். சட்டசபை முடிந்த பின் சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக் கூட்டம் நடந்தது.

பின், சபாநாயகர் கூறியதாவது, இன்று காலை 10 மணிக்கு வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். நாளை விடுமுறை.
வரும் 21ம் தேதியில் இருந்து, 23ம் தேதி வரை பட்ஜெட் மீது விவாதம் நடக்கும். எம்.எல்.ஏ.,க்கள், சட்டசபை கட்சி தலைவர்கள், எதிர்க்கட்சி தலைவர் பேசுவர். வரும், 24ம் தேதி நிதி அமைச்சர் தியாகராஜன், வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் பதிலுரை அளிப்பர்.

தொடர்ந்து, துணை நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். அன்றுடன் சட்ட சபை நிறைவடையும். மானிய கோரிக்கை மீது விவாதம் நடத்தும் தேதி, அரசு வழிகாட்டுதல் அடிப்படையில் முடிவெடுக்கப்பட்டு தெரிவிக்கப்படும். பட்ஜெட் மீது விவாதம் நடக்கும் மூன்று நாட்களும், கேள்வி நேரம் உண்டு. பதிலுரை அன்று கேள்வி நேரம் கிடையாது.

கடந்த கூட்டத்தை போல், இந்த கூட்டத் தொடரில் கேள்வி பதில், நிதி அமைச்சர் மற்றும் வேளாண் துறை அமைச்சர் பதிலுரை நேரடியாக ஒளிபரப்பப்படும் என தெரிவித்துள்ளார்.

Views: - 322

0

0