கொரோனா சமயத்திலும்… இந்த ஆண்டு பீகார்.. அடுத்த ஆண்டு தமிழகம்.. தேர்தல் ஆணையத்தின் அட்டகாசமான ப்ளான்..!

22 August 2020, 11:45 am
election_commission_of_india_updatenews360
Quick Share

நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், இடைத்தேர்தல்கள், சட்டசபை தேர்தல்களை நடத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது. பீகாரில் அக்டோபர், நவம்பர் மாதங்களிலும், அடுத்த ஆண்டு ஏப்., மே மாதங்களில் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம், புதுச்சேரியில் சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால், செப்டம்பர் 7ம் தேதி வரை நாடு முழுவதும் இடைத்தேர்தலை நடத்துவதில்லை என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக உள்ளது.

இருப்பினும், கொரோனா பாதிப்பு ஒருபுறம் இருந்தாலும், மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தலை எப்படியாவது நடத்தியே ஆக வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. இதையொட்டி, தேர்தலை நடத்துவது குறித்து அரசியல் கட்சிகளுடன் கருத்து கேட்கப்பட்டது. அதேபோல, மாநில தேர்தல் அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து, கொரோனா காலத்திலும், தகுந்த பாதுகாப்புடன் தேர்தலை நடத்துவதற்கான வழிமுறைகள் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

EC- Updatenews360

அதன்படி, ஒரு வாக்குச்சாவடியில் 1000 பேருக்கு மேல் வாக்களிக்கலாம். வாக்குச்சாவடிகளில் சானிடைசர், சோப்பு வைக்க வேண்டும், 5 வாகனங்களில் மட்டுமே பிரச்சாரம் செய்ய அனுமதி, பிரச்சாரத்தின் போது தனி நபர் இடைவெளி கட்டாயம், தேர்தல் அலுவலர்கள் மாஸ்க் அணிந்து தேர்தல் பணிகளை கவனிக்க வேண்டும். தெரு பிரச்சாரம் செய்ய 5 பேருக்கு மட்டுமே அனுமதி, 80 வயதுக்கு மேற்பட்டோருக்கு தபால் வாக்கு, வேட்பு மனு தாக்கல் செய்ய வேட்பாளருடன் இருவருக்கு மட்டுமே அனுமதியளிக்கப்படும்.

Rajya_Sabha_By_Election_Kerala_Uththarpradesh_UpdateNews360

வாக்காளர்களுக்கு சளி, காய்ச்சல் இருப்பினும் அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, கடைசியாக வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள். வாக்களிக்கும் போது, கையுறை அணிந்து வாக்கு இயந்திரத்தை பயன்படுத்த வேண்டும்.

இது போன்ற விதிமுறைகளை கடைபிடித்து திட்டமிட்டபடி தேர்தல் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. எனவே, தமிழகத்தில் திட்டமிட்டபடி தேர்தல் நடக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Views: - 28

0

0