‘தமிழகத்தில் இருப்பது என்றும் எனக்கு மகிழ்ச்சி’ : தமிழில் டுவிட் போட்டு தொண்டர்களை உற்சாகப்படுத்திய அமித்ஷா..!!

21 November 2020, 4:02 pm
amit shah in chennai - updatenews360
Quick Share

சென்னை : 2 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சென்னை வந்தடைந்த பிறகு, தமிழக மக்களுக்காக தமிழிலில் டுவிட் போட்டுள்ளார்.

டெல்லியில் இருந்து தனிவிமானம் மூலம் சென்னைக்கு வந்த அவரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பாஜக மாநில தலைவர் எல். முருகன், தமிழக பாஜக பொறுப்பாளர் சி.டி. ரவி மற்றும் அமைச்சர்கள் வரவேற்றனர். இதைத் தொடர்ந்து, விமான நிலையத்திற்கு வெளியே பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் நடக்க, அதனை பார்வையிட்டவாறே ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள லீலா பேலஸ் ஓட்டலுக்கு புறப்பட்டார்.

செல்லும் வழியில் திடீரென தனது கான்வாயை நிறுத்தி சாலையில் சிறிது தூரம் நடந்து சென்று, தொண்டர்களை பார்த்து கையை அசைத்தார். பிறகு மீண்டும் காரில் ஏறி லீலா பேலஸ் ஓட்டலுக்கு சென்று ஓய்வெடுத்து வருகிறார்.

இதனிடையே, தமிழகத்தில் இருப்பது என்றும் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழில் டுவிட் போட்டுள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில், “சென்னை வந்தடைந்தேன்! தமிழகத்தில் இருப்பது என்றும் எனக்கு மகிழ்ச்சியே. இன்று பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் எனது அன்புக்குரிய தமிழக சகோதர சகோதரிகளிடையே உரையாற்றுகிறேன்!,” எனக் குறிப்பிட்டுள்ளார். அமித்ஷாவின் இந்தப்பதிவை பாஜக தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் லைக் செய்தும், பகிர்ந்தும் வருகின்றனர்.

Views: - 17

0

0

1 thought on “‘தமிழகத்தில் இருப்பது என்றும் எனக்கு மகிழ்ச்சி’ : தமிழில் டுவிட் போட்டு தொண்டர்களை உற்சாகப்படுத்திய அமித்ஷா..!!

Comments are closed.