ஊழல் செய்த கட்சிகளுடன் அண்ணாமலை கூட்டணி வைக்கமாட்டாரா? அண்ணாமலைக்கு சீமான் கேள்வி!!

Author: Udayachandran RadhaKrishnan
14 April 2023, 7:27 pm
Seeman speech - Updatenews360
Quick Share

மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று மதுரை விமான நிலையம் வந்தார்.

மதுரை விமான நிலையத்திலிருந்து பெருங்குடி வழியாக வந்த சீமான் பெருங்குடி அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கு அருகில் வைக்கப்பட்ட அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சீமானிடம் பாஜக தலைவர் அண்ணாமலை இன்று திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் பட்டியலை வெளியிட்டது குறித்த கேள்விக்கு.?

திமுக ஊழல் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்., அண்ணாமலை திமுக அமைச்சர்கள் ஊழல் பட்டியலை வெளியிட்டதால் அதிமுகவில் இருந்தவர்கள் எல்லாம் பரிசுத்தமானவர்கள் அல்ல.? யார் ஊழல் செய்தாலும் அவர்களுடைய ஊழல் பட்டியலை வெளியிடுவாரா.?

மேலும்., ஊழல் பட்டியலை வெளியிடும் அண்ணாமலை ஊழல் செய்தவர்களோடு கூட்டணி வைக்க மாட்டேன் என சொல்வாரா.? நேர்மையான அரசியல்வாதியாக இருந்தால் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதும் ஆட்சி செய்தவர்கள் மீது உள்ள ஊழல் பட்டியலை அண்ணாமலை வெளியிட வேண்டும். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசினார்.

தொடர்ந்து., ஐந்து வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த திமுக கவுன்சிலர் மீது கலாச்சத்திராவில் எடுத்த நடவடிக்கை போல் இந்த விஷயத்தில் அரசு செயல்படவில்லை குற்றச்சாட்டு நிலவுவதாக செய்தியாளர்கள் கேள்விக்கு.?

கலாஷேத்ராவில் திமுகவினர் இல்லை மாணவர்கள் தான் போராடினார்கள்., அதனால் தான் விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளார். திமுகவினர் இருந்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்காது.

ஒரு சிறந்த ஆட்சி என்றால் யார் தவறு செய்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுத்தால் தான் அது சிறந்த ஆட்சியாக இருக்கும் என்றார்.

சட்டமன்றத்தில் ஐபிஎல் பார்க்க டிக்கெட் வழங்க வேண்டும் என பேசியது குறித்து கேள்விக்கு.? இதுபோன்று பேசுபவர்களை தேர்வு செய்தது யார் ஒரு மோசமான ஆட்சி நடக்கிறது என்றால் அதற்கு பொறுப்பு தலைவர்கள் அல்ல அவர்களை தேர்ந்தெடுத்த மக்கள்தான் காரணம் நாட்டில் எவ்வளவோ பிரச்சனை இருக்கிறது.
அதை விடுத்து விட்டு ஐபிஎல் பிரச்சனையை பேசுகிறார்கள்.
ஐபிஎல் போட்டி என்பது 5 கோடி 10 கோடி என ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள் விளையாடி வருகிறார்கள். அதைப்பற்றி பேச வேண்டிய அவசியமே இல்லை.? அது ஒரு சூதாட்டம் என்றார்.

திருமங்கலம் அருகே பணித்தள பொறுப்பாளர் பேருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்., தொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்க காலதாமதம் செய்வதாக குற்றச்சாட்டு கொடுத்த கேள்விக்கு.? இந்த விவகாரத்தில் உண்மையை அறிந்து அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்தால் தான் இது போன்ற குற்றங்கள் நிகழாமல் தடுக்க முடியும்.

பல்லை உடைத்த பல்வீர் சிங் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை., அதேபோல் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்திலும் அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து., பேசியவர் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடும் என தெரிவித்தார்.

Views: - 234

0

0