தமிழகத்தில் மேலும் ஓர் அதிர்ச்சி…பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் : படுகாயமடைந்த 12ம் வகுப்பு மாணவர் சிகிச்சை பலனின்றி பலி!!

Author: Udayachandran RadhaKrishnan
30 April 2022, 10:02 am

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே பள்ளக்கால்புதுக்குடி பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஒரு மாணவர் கையில் கயிறு கட்டி வந்துள்ளார். அதற்கு மற்றொரு மாணவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் இரு தரப்பாக மாணவர்கள் மோதிக்கொண்டனர். இதில் ஒரு மாணவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மாணவர்களை சமரசம் செய்து காயமடைந்த மாணவரை நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த 12ம் வகுப்பு மாணவர் செல்வ சூர்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சமீப நாட்களாக பள்ளி மாணவர்களிடையே மோதல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக சமீபத்தில் டிஜிபி சைலேந்திர பாபு வீடியோ வெளியிட்டு அறிவுரை வழங்கிய நிலையில், மாணவர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க பள்ளிக்கல்வித்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!