என்னை வாழ்த்தி மதிச்சு கூப்பிட்டாரு : நடிகர் சிரஞ்சீவியை குடும்பத்தினருடன் சந்தித்த பிரபல பெண் அமைச்சர் நெகிழ்ச்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
30 April 2022, 8:58 am
Chiranjeevi and Roja -Updatenews360
Quick Share

தெலுங்கானா : ஐதராபாத்தில் உள்ள நடிகர் சிரஞ்சீவியின் இல்லத்திற்கு நடிகையும், அமைச்சருமான ரோஜா சந்தித்துப் பேசினார்.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள நடிகர் சிரஞ்சீவியின் வீட்டுக்கு குடும்பத்துடன் நேற்று சென்று சந்தித்தார் அமைச்சர் ரோஜா.

அமைச்சர் ரோஜாவை பூங்கொத்து கொடுத்து வரவேற்ற சிரஞ்சீவி
பின்னர் பொன்னாடை போர்த்தி அமைச்சராக பதவி ஏற்றதற்கு வாழ்த்து தெரிவித்தார்.

நடிகர் சிரஞ்சீவி மற்றும் அவருடைய மனைவி சுரேகா ஆகியோரிடம் பேசிய அமைச்சர் ரோஜா மற்றும் அவரது குடும்பத்தினர் சந்தித்து பேசினர்.

பின்னர் இந்த சந்திப்பு குறித்து நிருபர்களிடம் பேசியபோது, மரியாதை நிமித்தமாக நடிகர் சிரஞ்சீவியை சந்திக்க வந்ததாகவும் அமைச்சராக பதவியேற்ற போது சிரஞ்சீவி வாழ்த்து தெரிவித்து வீட்டுக்கு அழைத்ததின் பேரில் தற்போது வந்து சந்தித்து செல்வதாக தெரிவித்தார்.

Views: - 641

0

0