பழி வாங்கும் எண்ணத்தில் வழக்கை விசாரிக்கறீங்களா? கொந்தளிக்கும் ஆர்எஸ் பாரதி..!!!!

Author: Udayachandran RadhaKrishnan
24 August 2023, 6:59 pm
RS Bharati - Updatenews360
Quick Share

பழி வாங்கும் எண்ணத்தில் வழக்கை விசாரிக்கறீங்களா? கொந்தளிக்கும் ஆர்எஸ் பாரதி..!!!!

கடந்த 2006 முதல் 2011 ஆம் ஆண்டுகளில் திமுக ஆட்சியின் போது பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு அவர்கள் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீதும், அவரது மனைவி மணிமேகலை மீதும் லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்தது.

இந்த நிலையில், இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்குமாறு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில், அமைச்சர் தங்கம் தென்னரசு மனு தாக்கல் செய்திருந்தார். கடந்த 2022 ஆம் ஆண்டு இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவரையும் அவர்கள் மனைவியையும் வழக்கிலிருந்து விடுவித்து உத்தரவிட்டிருந்தது.

அதேபோல் 2006-2011 ஆம் ஆண்டுகளில் பிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சராக இருந்த கே.கே.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மற்றும் அவரது மனைவி ஆதிலட்சுமி உள்ளிட்டோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்தது. இதனையடுத்து, ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்குமாறு கோரி கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் அவரது மனைவியை விடுவித்து உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம் சொத்துக்குவிப்பு வழக்குகளில் இருந்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் விடுவிக்கப்பட்டதற்கு, எதிராக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. இது தொடர்பாக, சென்னையில் ஆர்.எஸ்.பாரதி அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அப்போது பேசிய அவர், நீதிமன்றங்கள் மீது திமுகவுக்கு அளவு கடந்த நம்பிக்கையும், மரியாதையும் உள்ளது; முடித்து வைத்த வழக்குகளை மீண்டும் விசாரிப்பது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, KKSSR மீதான வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தை நாடுவோம். பல்வேறு வழக்குகளில் நீதிமன்றத்தை நாடி வெற்றி பெற்றுள்ளோம். தாமாக முன்வந்து விசாரிக்கும் அதிகாரத்தை பழிவாங்கும் நோக்கத்தோடு பயன்படுத்தக் கூடாது. எம்.எல்.ஏ ஓபிஎஸ், நத்தம் விஸ்வநாதன் வழக்குகளை ஏன் விசாரிக்கவில்லை? என கேள்வி எழுப்பியுள்ளார்.

நீதிபதி ஆனந்த் வெங்கடேஷின் நடவடிக்கைகளில் பாகுபாடு உள்ளதாகவும், திமுக அமைச்சர்கள் மீதான வழக்கை சட்டப்படி எதிர்கொள்வோம். எனக்கு கூடத்தான் 7 நாட்களாக தூக்கம் வரவில்லை தூக்கம் வரவில்லை என்றால் என்ன நோய் என்று மருத்துவரை தான் பார்க்க வேண்டும் என, 3 நாட்களாக தூக்கம் வரவில்லை என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறியிருந்த நிலையில் அவருக்கு சூசகமாக பதிலளித்துள்ளார்.

Views: - 282

0

0