என்னை பற்றி விமர்சனம் செய்தவர்.. சவுக்கு சங்கரை கைது செய்தது தப்பில்லை..கையை உடைத்தது தப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
17 May 2024, 9:53 pm
H raja
Quick Share

என்னை பற்றி விமர்சனம் செய்தவர்.. சவுக்கு சங்கரை கைது செய்தது தப்பில்லை..கையை உடைத்தது தப்பு!!

இந்தியா முழுவதும் நடந்து கொண்டிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் 380 தொகுதிகளில் மூன்றாவது முறையாக பாஜகவிற்கு பெரும்பான்மை கிடைத்து விட்டது எனவும் இனி வரும் தொகுதிகள் பாஜகவிற்க்கு போனஸ் ஆக தான் இருக்கிறது என பாஜக மூத்த தலைவர் எச் . ராஜா தெரிவித்துள்ளார்

மேலும் நட்சத்திர வேட்பாளர்கள் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவது வழக்கம்தான் கேரள மாநிலம் வயநாடு பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி தோல்வி பயத்தின் காரணமாகவே ரேபரலி தொகுதியில் போட்டியிடுகிறார் .

உத்திர பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயவதிக்கு எம் பி, எம் எல் ஏ இல்லாமல் இருந்தாலும் 10 சதவிகிதம் வாக்கு வங்கி உள்ளது. காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிகள் கூட்டணியில் இருந்த போதும் 64 தொகுதிகளை பாஜக கைப்பற்றியது. தற்போது தனித்து நிற்பதால் பாஜகவிற்கு வெற்றி எளிதாகிவிட்டது.

என்னை பற்றியே விமர்சனம் செய்தவர்தான் சவுக்கு சங்கர். அவர் செய்தது தவறாக இருந்தாலும் கஞ்சாவை வைத்து கைது செய்து அவரது கையை உடைத்தது காவல்துறையின் அராஜக செயலாக உள்ளது.

மேலும் படிக்க: காணாமல் போன மனநிலை பாதிக்கப்பட்ட மகள்.. வைரலான அதிர்ச்சி வீடியோ : பதறிய பெற்றோர் அளித்த பகீர் புகார்!

மருத்துவ பரிசோதனையில் அவரது கையில் இரண்டு இடங்களில் எலும்பு முறிவு இருப்பதாக தெரிவித்துள்ளனர். சவுக்கு சங்கரை கைது செய்த காவல்துறையினர் பிரதமரை அவதூறாக பேசிய அமைச்சர்கள் தா மோ அன்பரசன், அனிதா ராதா கிருஷ்ணன் மீது ஏன் நடவடிக்கை எடுக்க வில்லை எனவும் கூறினார்

திமுகவினரின் வீடுகளில் இருந்துதான் ஜாபர் சாதிக் 2000 கோடி ருபாய் கஞ்சா கடத்தலுக்கு கொண்டு சென்று இருக்கிறார்.
தமிழக முதல்வர் கஞ்சாவை ஒழிப்பது குறித்து காவல்துறையினருக்கு ஆலோசனை வழங்குவது வேடிக்கையாக உள்ளது.

காவலர்களுக்கு பிடித்த கஞ்சாவை வெளியே தெரிவிக்காமல் இருப்பதற்காக ஆலோசனை வழங்குகிறார்கள் எனவும் தெரிவித்தார் .

தற்போது பெய்த கோடை மழை குறித்து கேட்டபோது கோடை மழை பெய்தது நல்லது தான் சுமார் ஒரு மாதங்களாக பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 100 டிகிரி தாண்டி வெயில் அடித்தது ஆனால் தற்போதுமழை மகிழ்ச்சியாக உள்ளது .

பயணிகள் பேருந்துகளின் உள்ளேயும் குடையுடன் பிடித்து தான் பயணிக்கிறார்கள்,அரசு பேருந்துகளை பார்த்தாலே பயமாக உள்ளது பேருந்தில் சக்கரங்கள் கலந்து காரின் மீது மோது விடுமோ என பயமாக உள்ளது எந்த அளவிற்கு தான் போக்குவரத்து கழகங்கள் இருக்கின்றன.

தமிழக அரசு நிர்வாகம் மோசமாக உள்ளது. விரைவில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்படும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. என்திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பின்பு எச் ராஜா கூறினார்.

Views: - 265

0

0