ஆக.,2ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் கருணாநிதி திருவுருவப்படம் திறப்பு : சபாநாயகர் அறிவிப்பு

Author: Babu
24 July 2021, 6:30 pm
karunanidhi - appavu - updatenews360
Quick Share

சென்னை : வரும் ஆகஸ்ட் 2ம் தேதி முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்படத்தை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைக்க இருப்பதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலினின் தந்தையும், மறைந்த முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் திருவுருவப்படம் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே, மேகதாது அணை விவகாரம் தொடர்பாக டெல்லிக்கு சென்று முதலமைச்சர் ஸ்டாலின், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து பேசினார். அப்போது, தமிழக சட்டப்பேரவையில் கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைப்பதற்காக, குடியரசு தலைவருக்கு அழைப்பு விடுத்ததாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார். இந்த அழைப்பையும் அவர் ஏற்றுக் கொண்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவையில் வரும் ஆக., 2ம் தேதி முன்னாள் முதலமைச்சர்மேலும், அன்றைய தினம் மாலை 5 மணிக்கு நடக்கும் நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் ராம்நாத்கோவிந்த் பங்கேற்று, கருணாநிதியின் திருவுருவப்படத்தை திறந்து வைப்பார் என்றும், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க கட்சி பாகுபாடின்றி அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்படும் என்று அவர் கூறினார்.

Views: - 245

0

0