உல்லாசத்துக்கு இடையூறாக குழந்தையை கடித்து, அடித்து, உதைத்து கொலை : கள்ளக்காதலனுடன் பெண் செய்த கொடூரம்!!!

Author: Udayachandran RadhaKrishnan
19 June 2023, 9:09 am
Illegal Affair Murder - Updatenews360
Quick Share

மாங்காடு அடுத்த கெருகம்பாக்கத்தை சேர்ந்தவர் செல்வ பிரகாசம். இவரது மனைவி லாவண்யா. இவர்களது மகன் சர்வேஸ்வரன் (வயது 2½). கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.
இதைத்தொடர்ந்து மனைவி லாவண்யாவை பிரிந்து செல்வபிரகாசம் தனியாக சென்று விட்டார். இதனால் லாவண்யா, தனது மகன் சர்வேஸ்வரனுடன் தனியாக வசித்தார்.

இந்த நிலையில் கடந்த மாதம் மகன் சர்வேஸ்வரன் தவறி கிழே விழுந்ததில் தலையில் காயம் அடைந்து இறந்து விட்டதாக அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்தார். பிரேத பரிசோதனைக்கு பின்னர் சர்வேஸ்வரன் உடல் அதே பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது. ஆனால் இதுபற்றி லாவண்யா தனது கணவர் செல்வபிரகாசத்துக்கு தகவல் தெரிவிக்க வில்லை.

இதற்கிடையே செல்வ பிரகாசம் கடந்த சில நாட்களுக்கு முன்பு மகனை பார்க்க சென்றபோது அவன் இறந்து இருப்பது தெரிந்து அதிர்ச்சி அடைந்தார். மேலும் லாவண்யாவின் நடவடிக்கை குறித்து அக்கம் பக்கத்தினர் சந்தேகம் தெரிவித்தனர்.

இதையடுத்து செல்வபிரகாசம் தனது மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக மாங்காடு போலீசில் புகார் அளித்தார். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

இதில் கள்ளக்காதல், உல்லாசத்துக்கு இடையூறாக இருந்ததால் லாவண்யா, அவரது கள்ளக்காதலனான அதே பகுதியை சேர்ந்த மணிகண்டனுடன் சேர்ந்து குழந்தை சர்வேஸ்வரணை அடித்து கொலை செய்து இருப்பது தெரிந்தது.

மேலும் கொலையை மறைக்க அவன் தவறி கிழே விழுந்ததில் இறந்து விட்டதாக தெரிவித்து உள்ளனர். இதனால் ஆரம்பத்தில் லாவண்யாவின் மீது யாருக்கும் சந்தேகம் ஏற்படவில்லை. அவரும் மகன் சாவில் சோகத்தில் இருப்பது போல் நடித்து வந்தார்.

ஆனால் போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையின் போது லாவண்யா தனது மகனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்து நாடகமாடியதை ஒப்புக் கொண்டார்.

இதையடுத்து லாவண்யா, அவரது கள்ளக்காதலன் மணிகண்டன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். கணவர் பிரிந்து சென்ற பின்னர் வீட்டின் அருகே வசித்த மணிகண்டனுடன் லாவண்யாவுக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது.

இருவரும் கணவன், மனைவி போல் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். அவர்களின் உல்லாச சந்திப்பிற்கு இடையூறாக குழந்தை சர்வேஸ்வரன் இருந்தான்.

இதனால் ஆத்திரம் அடைந்த மணிகண்டன், குழந்தை சர்வேஸ்வரன் உடலில் கடித்து வைத்து உள்ளார். மேலும் இருவரும் தொடர்நது குழந்தை சர்வஸே்வரனை அடித்து உதைத்து கொடுமை படுத்தி உள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே தள்ளியதில் குழந்தை சர்வேஸ்வரன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இறந்து விட்டான்.

இது வெளியே தெரிந்தால் மாட்டிக்கொள்வோம் என்று நினைத்து லாவண்யா நாடகமாடியது விசாரணையில் தெரியவந்து உள்ளது.
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மகனை தாயே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்து நாடகமாடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 392

0

0