ஆட்சி அதிகாரத்தை வைத்து அதிமுக, பாஜகவை வீழ்த்த திமுக சதி : ஜிகே வாசன் பகீர் குற்றச்சாட்டு!!!

Author: Udayachandran RadhaKrishnan
19 June 2023, 9:37 am
GK Vasan - Updatenews360
Quick Share

தமிழக அரசியல் நிலவரம் தொடர்பாக ஈரோட்டில் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜிகே வாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டு வர்ப்பட்டு 90 சதவீத பணிகள் முடிவு பெற்று அத்திக்கிடவு அவினாசி திட்டப் பணிகள் உள்ள நிலையில் திமுக அரசு பொறுப்பு ஏற்றதில் இருந்து தாமப்படுத்தி வருவதாக விமர்சித்தார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டு உள்ளது.சாராயம், போதை பொருட்கள், தவறான டாஸ்மாக் விற்பனை,ஆகியவை அதிகரித்து உள்ளது. இதனை தடுத்து நிறுத்த தவறியதால் தான் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் கேட்டு உள்ளதாக குற்றம்சாட்டினார்.

நீட் தேர்வு பற்றி மாணவர்களிடமும் பெற்றோர்களிடமும் தமிழக அரசு குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் அதனையும் தாண்டி நீட் தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு அதிகரித்து உள்ளதாக கூறினார்.

இந்திய அளவில் நீட் தேர்வில் சாதனை படைத்த தமிழக மாணவர்களை தமிழக அரசு பாராட்ட வில்லையெனவும் கூறினார். அதிமுக மற்றும் பாஜக நிர்வாகிகளை கைது செய்ததற்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்தவர், ஆபத்தாக பணிபுரியும் துப்புரவு தொழிலாளர்களுக்கு குரல் கொடுத்தால் அது தவறாக உள்ளது கூறினால் அவர் மீது வழக்கு தொடரப்படுவதாக கூறினார். பாஜக ,அதிமுக ,தமாக ஆகிய கூட்டணி கட்சிகளின் வரும்கால வெற்றியை ஜீரணிக்க முடியாமல்,

திமுக கூட்டணி எங்கள் கூட்டணி மீது அவதூறு பேச தொடங்கி உள்ளதாகவும் தெரிவித்தார். திமுக கூட்டணியில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளது. ஆட்சியாளர்கள் அதிகாரத்தை பயன்படுத்தி வரும் நாடாளுமன்ற தேர்தல் பணிகளில் இருந்து எங்களை முடக்கி விடலாம் என்று நினைப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

பாஜக 9 ஆண்டுகள் ஆட்சியை மத்தியில் நிறைவு செய்து இருக்கிறது, பாஜக ஆட்சியில் பாதுகாப்பு ,வளர்ச்சி ஆகியவை அதிகரித்து உள்ளது. மீண்டும் பாஜக ஆட்சி அமையும்.கொரோனோ நேரத்தில் மக்களின் நம்பிக்கையை பாஜக பெற்று உள்ளதாக தெரிவித்தார்.

திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது சோதனை செய்து அமலாக்க துறை கைது செய்து உள்ளது. தவறு செய்தவர்களை குற்றம் செய்தவர்களை திமுக தியாகி போல் சித்தரிக்க முயற்சி செய்கிறது.

அவரை மீண்டும் அமைச்சராக அரசு முயற்சி செய்கிறது ஆனால் மக்கள் இதனை விரும்ப மாட்டார்கள். பாஜக, அதிமுக ,தமாக ஆகிய கூட்டணி கட்சிகள் மக்கள் விரும்பும் கூட்டணி கட்சியாக இருக்கிறது. திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை மக்கள் வெறுக்கும் கட்சியாக உள்ளதாக தெரிவித்தார்.

திருடனுக்கு உதவுபவர்கள் நல்லவர்களாக ஒரு போதும் இருக்க மாட்டார்கள். மத்திய அரசின் சிபிஐ போன்ற பிரிவுகள் சோதனைக்கு வரும் தமிழக அரசிடம் அனுமதி கேட்டு வந்தால் இப்படி தான் இருக்கும்.

Views: - 269

0

0