துணிவா..? வாரிசா..? செய்தியாளரின் கேள்விக்கு நாசுக்காக பதில் சொன்ன அண்ணாமலை..!!

Author: Babu Lakshmanan
12 January 2023, 10:18 am
Quick Share

துணிவு, வாரிசு இரண்டு படங்களையும் பார்ப்பேன் என்று திண்டுக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலையிடம், வாரிசு மற்றும் துணிவு படம் குறித்து பேள்வி எழுப்பப்பட்டது. இது குறித்து அவர் அளித்த பதிலாவது :- எனக்கு நடிகர் விஜய்யும் பிடிக்கும் நடிகர் அஜித்தையும் பிடிக்கும். அஜித் அவர்கள் தனி தனி மனிதனாக உழைப்பினால் யாருடைய ஆதரவும் இன்றி சினிமா துறையில் சாதித்து, பல பேருக்கு ரோல் மாடலாக உள்ளார். விஜய் அவர்களை முதல் படத்திலிருந்து பார்த்து வருகிறேன்.

இன்றைக்கு அவர் மிரட்டி இருக்கிறார் . வாரிசு,துணிவு இரண்டு படத்தையும் நான் பார்ப்பேன். அரசியல்ல துணிவா இருப்பேன்.. வாரிசு அரசியலை எதிர்க்கிறோம். நேரம் இருக்கும்போது இரண்டு படத்தையும் சென்று பார்ப்பேன்.

இரண்டு நடிகர்கள் மீது மிகப்பெரிய அபிப்பிராயம் இருக்கிறது. ரசிகர்கள் யாரும் சண்டையிட்டுக் கொள்ளக் கூடாது. அஜித், விஜய் போல் நீங்களும் தனித்துவமாக வரவேண்டும் உங்களுக்கு பல கடமைகள் உள்ளது. ரசிகர்கள் யாரும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ளக் கூடாது. இதை நான் அரசியலாக சொல்லவில்லை, சகோதரராக சொல்கிறேன், எனக் கூறினார்.

Views: - 104

0

0