அடுத்து அந்த 6 திமுக அமைச்சர்கள் தான்… பினாமிகளுக்கு செக்… விரைவில் ஆளுநர் ஆட்டத்தை ஆரம்பிப்பார் ; அண்ணாமலை சொன்ன சூசக தகவல்..!!

Author: Babu Lakshmanan
27 July 2023, 3:54 pm
Quick Share

ஆறு அமைச்சர்களின் பெயர்களை சொல்வதைவிட, பினாமிகள் மீது நடவடிக்கை எடுத்தால் தான் தமிழ்நாடு லஞ்சம் லாவண்யம் இல்லாத மாநிலமாக மாறும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ராமேஸ்வரத்தில் நாளை நடைபெற இருக்கும் பாதயாத்திரை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மதுரை விமான நிலையம் வருகை தந்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் ;-நாளை ராமேஸ்வரத்தில் ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை தொடங்க உள்ளது. உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்கிறார். 100 நாட்களில் 234 தொகுதிகள் செல்கிறோம். நாடாளுமன்ற தேர்தல் வருவதால் ஜனவரி மாதத்தில் முடிக்க உள்ளோம்.

சில கட்சித்தலைவர் சார்பாக துவக்கத்தில் வருகிறார்கள் சிலர். அவர்கள் சார்பாக தலைவர்கள் அனுப்புகிறார்கள். ஒரு சில மாநகரங்களில் மாநாடு நடைபெற உள்ளது. அங்கு மத்திய அமைச்சர்கள் பங்கேற்பார்கள். நாளை மாலை துவக்க விழா. நாளை மறுநாள் யாத்திரை துவங்கும்.

புள்ளி விவரத்தின் அடிப்படையில் தமிழகத்திற்கு மோடி செய்தது குறித்து பேச உள்ளோம். எதேர்ச்சியாக திமுக என்ன வேண்டும் என்றாலும் கூறலாம். ஒரு புள்ளி விவரம் பொய் சொல்லாது. ஒன்பது ஆண்டுகளில் ஒரு சரித்திர சாதனையை மோடி அரசு செய்திருக்கிறது. மக்களின் பெரும் ஆதரவோடு இந்த யாத்திரை நடக்கும், எனக் கூறினார்.

என்.எல்.சி.யால் விளைநிலங்கள் அளிக்கப்படுவது குறித்த கேள்விக்கு பதிலளித்ததாவது :- நெல் அறுவடை செய்யக்கூடிய நிலத்தில் ஜேசிபி இயந்திரத்தை விட்டு நிலத்தை கையகப்படுத்துவது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. என்.எல்.சி.க்கு நிலங்களை கையகப்படுத்திக் கொடுப்பது மாநில அரசு தான் என்று சிஎம்டி எனக்கு தொலைபேசி மூலமாக தெரிவித்தார்கள்.
இடம் கொடுத்திருக்கிறார்களோ, அவர்களுக்கு எக்ஸ்பென்ஷன் ப்ராஜெக்டில் வேலை கொடுக்க வேண்டும் ஒன்று. இரண்டாவது எங்கே எல்லாம் நிலத்தை எடுக்கிறோமோ, அங்கெல்லாம் என்ன ஆன்சர் காம்பன்சேஷன் கொடுக்க வேண்டும்.

பயிர் விளைந்திருக்கும் நிலத்தில் இயந்திரத்தை விட்டு நிலத்தை எடுப்பது என்எல்சி மேனேஜிங் டைரக்டரிடம் தமிழக பாஜக மாநில தலைவர் நான் என் கண்டனத்தை பதிவு செய்தேன். என்ன செய்ய பொருத்தவரை தமிழகத்தில் ஏகப்பட்ட நபர்களுக்கு வேலை இருக்கிறது. நாம் அதை மறக்க முடியாது. ஒரு முறையைத் தாண்டி தர்மத்தின் வழியாக யாரும் செயல்படக் கூடாது என்று நாங்கள் சொல்லி இருக்கிறோம், என தெரிவித்தார்.

திமுகவின் இரண்டாவது சொத்து பட்டியல் பெட்டியின் மூலமாக கவர்னரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், முதல் சொத்து பட்டியல் செய்தியாளர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை :- ஆறு அமைச்சர்கள் சம்பந்தப்பட்ட பினாமிகள் யார் பெயரில் இடங்கள் உள்ளது..? யார் பணத்தை சேகரிக்கிறார்கள்..? சேகரிக்கும் உறுப்பினர் யார்..? இன்னைக்கு தலைமைச் செயலகத்துக்கு போனால் தான் வேலையே நடக்கும்.

ஏன் நம் கவர்னர் கொடுத்திருக்கும் என்றால் இதற்கு ஒரு தீர்வு வேண்டும் என்பதற்காகவே. மக்களிடம் நாம் விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்கிறோம். திமுக அரசு ஊழல் செய்திருக்கிறது என்று இனிமே DMK FILES 2 மட்டுமில்லை. இனிமேல் நாம் கொடுக்கப் போகும் புகார்களில் தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எங்களைப் பொறுத்தவரை நாங்கள் இப்போது கவர்னரை நம்புகிறோம். கவர்னர் அவர்கள் பின்னால் இருக்கும் பினாமிகள் மீது நடவடிக்கை எடுக்கணும். ஆறு அமைச்சர்களின் பெயர்களை சொல்வதை விட, பினாமிகள் மீது நடவடிக்கை எடுத்தால் தான் தமிழ்நாடு லஞ்சம் லாபம் இல்லாத மாநிலமாக மாறும், எனக் கூறினார்.

யானை தன் பலம் என்பதை காட்டிலும் என்று முதல்வர் ஸ்டாலின் பேசியது குறித்த கேள்விக்கு அண்ணாமலை பதிலளித்ததாவது :- யாரு முதலமைச்சரின் பேச்சுக் குறிப்பை எழுதுகிறார்களோ, அவர்களை தான் குறை சொல்ல வேண்டும். முதலமைச்சர் ஒரு அமைச்சரின் வைப்பு நிதியில் 41 கோடி ரூபாய் எப்படி இருக்கும் என்று இது குறித்து பேச வேண்டும். முதலமைச்சரின் நாற்காலிக்கு இது போன்ற வார்த்தைகள் அழகு கிடையாது. நாங்களும் எதற்கும் தயாராக தான் இருக்கிறோம். ஊழலுக்கு உண்டான எங்களது சண்டையை நாங்கள் எப்பொழுதும் நிறுத்திக் கொள்ள முடியாது, என்றார்.

தொடர்ந்து, என்எல்சி குறித்து நீங்கள் பேசி தடுத்திருக்கலாம் அல்லவா என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்ததாவது :- நிலத்தை கையகப்படுத்துவது பிரச்சனையா..?, நிலத்தை கையகப்படுத்தும் முறை பிரச்சனையா..? ஒரு பஞ்சாயத்தின் அனுமதி பெற்று தான் நிலத்தை காயப்படுத்துவதை செயல்படுத்த முடியும். இதற்கு மாநில அரசு, மத்திய அரசு இரண்டுமே இருக்கிறது. இன்று என்.எல்.சி யை நிறுத்தினால் 16,000 தமிழர்கள் வேலையை இழப்பார்கள்.

நிலத்தை கையப்படுத்தும் முறையை அரசு பின்பற்ற வேண்டும். இதை அரசியல் ஆக்குவது எந்த விதத்திலும் தகுதி இல்லை. பயிரிடும் போது பார்க்கவில்லை, பயிர் விளையும் போது பார்க்கவில்லை. பயர் அறுவடைக்கு தயாராக இருக்கும்போது, ஜேசிபி இயந்திரத்தை விட்டு அகற்றுவது முறையானது அல்ல, எனக் கூறினார்.

கேந்திர வித்யாலயா பள்ளியில் தமிழ் புறக்கணிக்கப்பட்டது குறித்த கேள்விக்கு, இந்த மாதிரி தவறு இருந்தால் உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று கேவி சேர்மனுக்கு கடிதம் எழுதுகிறேன், என்றார்.

தொடர்ந்து, இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சி எம்பிக்கள் மணிப்பூர் சென்று கிரவுண்ட் ரிப்போர்ட் கொடுக்க உள்ளார்கள் என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்து அண்ணாமலை கூறியதாவது :- இந்தியாவில் ரொம்பவும் காம்ப்ளக்ஸ் ஆக இருக்கக்கூடிய மாநிலம் மணிப்பூர். ஏகப்பட்ட பிரிவினர்கள் அடிக்கடி சண்டையிடுவார்கள். கவர்மெண்ட் இடம் லஞ்சம் வாங்கி தான் ராணுவத்திற்கு ரோடு போடவே அனுமதித்தார்கள். மக்கள் தான் அந்த தீர்வை கொண்டு வர வேண்டும் என்று அரசு அதுக்கான முயற்சியை எடுத்து வருகிறது. மத்திய அரசே சரி செய்யும். பாராளுமன்றத்தில் நாங்கள் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறோம் என்று மத்திய இணை அமைச்சர் பேசுவதற்கு தயாராக உள்ளார். எதிர்க்கட்சி நண்பர்கள் அரசியல் செய்யும் காரணத்திற்காக அரசியல் செய்வது எந்த விதத்திலும் பொருத்தமாக இருக்கும்?, எனக் கூறினார்.

முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் யாத்திரைக்கு அழைக்க உள்ளீர்களா..? என்பது குறித்த கேள்விக்கு, ஒரு நல்ல தமிழகத்தை யாரெல்லாம் உருவாக்க வேண்டும் என நினைக்கிறார்களோ, அவர்களெல்லாம் இந்த பாதையாத்திரைக்கு வெல்கம் என்று தெரிவித்துவிட்டு, கார் மூலமாக ராமேஸ்வரத்திற்கு புறப்பட்டு சென்றார்.

Views: - 228

0

0