நானும் தான் குடிப்பேன்… ஒரு டாஸ்மாக்கை மூட நாங்க அரசியலுக்கு வரல ; அண்ணாமலை பரபர பேச்சு!!

Author: Babu Lakshmanan
2 April 2024, 11:48 am

டாஸ்மாக் கடையை மூடி விட்டு கள்ளுக்கடையை திறப்போம் என்று ஆனைகட்டி பகுதியில் பிரச்சாரம் செய்த பாஜக வேட்பாளர் அண்ணாமலை உறுதியளித்துள்ளார்.

கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அண்ணாமலை ஆனைகட்டி பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து, மக்கள் மத்தியில் பேசிய அண்ணாமலை கூறியதாவது :- பிரதமருக்கு பிடித்த பழங்குடி மக்கள் இருக்கும் ஆனைகட்டியில் இருக்கிறோம். மத்திய அரசின் திட்டங்கள் அதிகம் வந்து சேரும் இடம்.

மேலும் படிக்க: நீங்க சிட்டிங் எம்பி என்பது மறந்து போச்சா..? திமுக எம்பி கனிமொழிக்கு நடிகை விந்தியா சரமாரி கேள்வி..!

வளர்ச்சி அனைத்து பகுதிகளுக்கும் வர வேண்டும். மலைப் பகுதிகளுக்கு சிறப்பு திட்டங்களை மோடி மட்டும் தான் வைத்துள்ளார். இங்கு பள்ளிகள் அதிகப்படுத்தப்பட வேண்டும். மோடி வீடுகள், பைப் குடிநீர், எரிவாயு சிலிண்டர் மலை வாழ் மக்களுக்கும் வந்து சேர வேண்டும். செங்கல் சூலை விவகாரத்தில் திமுக குழந்தையையும் கிள்ளி விட்டு, தொட்டிலும் ஆட்டி விடுவார்கள். இவர்களே பிரச்சனை ஆரம்பித்து வேறு ஒருவர் மீது பழி போடுகிறார்கள்.

மக்கள் வாழ்வாதாரமும் பாதிக்காமல் இயற்கையோடு ஒன்றி இருக்கும் பகுதிகளான ஆனைகட்டி போன்ற பகுதிகள் பாதுகாக்கப்பட வேண்டும். இங்குள்ள மரங்கள் எல்லாம் ஒரு வைரத்துக்கு சமம். அதே சமயம் வளர்ச்சியும் இருக்க வேண்டும். இந்தியாவின் ஆதி குடி பழங்குடி தான். மோடி தான் பழங்குடியை சேர்ந்த பெண்ணை குடியரசு தலைவர் ஆக்கினர். மலை வாழ், பழங்குடி மக்களுக்கு பாதுகாவலன் மோடி தான்.
இந்த ஒரு வண்டி தான் டெல்லி செல்லும். மற்றவை எல்லாம் லோக்கல் வண்டிகள்.

மேலும் படிக்க: பாஜக 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெறாது… வெளியான புது கருத்துக்கணிப்பு ; பிரேமலதா சொன்ன தகவல்…!!

டெல்லிக்கு போகும் ஒரே வண்டி நான் இருக்கும், இந்த வண்டி தான். டாஸ்மாக்கை இங்கிருந்து எடுக்க வேண்டும். ஒரு டாஸ்மாக்கை எடுப்பதற்கு நாங்கள் அரசியலுக்கு வரவில்லை. எல்லா டாஸ்மாக்கை எடுக்க தான் அரசியலுக்கு வந்திருக்கிறோம். குடிப்பவர்களை குடிக்க வேண்டாம் என நம் கூற முடியாது. ஜனநாயக நாட்டில் குடிக்க உரிமை இல்லையா..? என்பார்கள். நானும் தான் குடிப்பேன்.

டாஸ்மாக்கில் இருப்பவை spirit கள், அவற்றை மூடிவிட்டு கள்ளுக்கடையை திறப்போம். குடி என்பது கிராமத்திற்குள் வந்து, பின்னர் வீட்டிற்குள் வந்து பெண்களுக்கு மன உளைச்சலாக உள்ளது. அதனால் தான் கள்ளுக்கடைகளை திறந்து டாஸ்மாக்கை மூடுவோம் என்கிறோம், என தெரிவித்தார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!