அதிமுக – பாஜக பிரிவு என்பது அரசியல் நாடகம்… சேர்ந்து இருக்கும் போதே ஒன்னும் முடியல ; திருமாவளவன் விமர்சனம்!!

Author: Babu Lakshmanan
2 April 2024, 1:10 pm

அதிமுகவிற்கு வாக்களித்தாலும் அது பாஜகவிற்கு வாக்களித்ததாக தான்‌ பொருள் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

அரியலூரில் இரண்டாவது நாளாக பிரச்சாரத்தை தொடங்கினார் தொல்.திருமாவளவன். அப்போது? அவர் பேசியதாவது :- இந்த நாடாளுமன்ற தேர்தலில் வழக்கமான தேர்தல் அல்ல. சங் பரிவார் அமைப்புகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையேயான போர்.

மேலும் படிக்க: நானும் தான் குடிப்பேன்… ஒரு டாஸ்மாக்கை மூட நாங்க அரசியலுக்கு வரல ; அண்ணாமலை பரபர பேச்சு!!

அதிமுக அணி வேறு. பாஜக அணி வேறு என்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர். இவர்கள் ஒன்றாக இருந்தபோதே வெற்றி பெற முடியவில்லை. பிரிந்து நின்று வெற்றி பெறமுடியாது என்று அவர்களே தெரியும். அதிமுக-வும், பாஜக-வும் அரசியல் நாடகம் ஆடுகின்றனர்.

மேலும் படிக்க: அடித்தட்டு மக்களுக்கான கட்சி அதிமுக… கோவையில் அதிமுக வேட்பாளர் சிங்கை ஜி ராமச்சந்திரன் பிரச்சாரம்…!!

மக்கள்‌ விரோத சட்டங்களான வேளாண் மசோதா, குடியுரிமை திருத்தச் சட்டங்கள் மற்றும் இட ஒதுக்கீடுகள் அமலாக முக்கிய காரணம் அதிமுக-பாமக கட்சிகள். இட ஒதுக்கீட்டிற்கு எதிரானவர் தான் என்று பேசியவர் நரேந்திர மோடி. ‌இன்றைய பாஜக சிறுபான்மையினருக்கு, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிரான கட்சி- அவர்களுடன் இணைந்துள்ளனர் பாமக.

சமூக நீதியை பாதுகாக்கவே திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக-வுடனான கூட்டணியை நெருக்கடிகள்‌ வந்தாலும் தொடர்ந்து வருகின்றனர். நாடாளுமன்றத் தேர்தலில் கூட அதிமுகவினர் பாஜகவை விமர்ச்சிக்க மாட்டார்கள். திமுக வினரைத் தான் விமர்சனம் செய்வார்கள். தேர்தலில் கூட பாஜக வை விமர்ச்சிக்காதவர்கள் அதிமுக என்பதை மக்கள்‌ உணர வேண்டும். இந்த பிரச்சாரத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் மற்றும் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா உடனிருந்தனர்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ