அடித்தட்டு மக்களுக்கான கட்சி அதிமுக… கோவையில் அதிமுக வேட்பாளர் சிங்கை ஜி ராமச்சந்திரன் பிரச்சாரம்…!!

Author: Babu Lakshmanan
2 April 2024, 12:58 pm

அதிமுக எப்போதும் அடித்தட்டு மக்களுக்கான கட்சி என்று கோவை நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் தெரிவித்தார்.

கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காந்திபுரம், ஜிபி சிக்னல், மற்றும் சித்தாபுதூர், பாப்பநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கழகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள கோவை நாடாளுமன்ற வெற்றி வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

மேலும் படிக்க: மதுரை முத்து போல PROPERTY காமெடி செய்கிறார் உதயநிதி ; சீமான் கிண்டல்…!!!

வாகனப் பிரச்சாரம் மூலமாகவும், வீடு வீடாக மக்களை சந்தித்து துண்டு பிரசுரங்கள் வழங்கியும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

மேலும், கோவை மாநகர் மாவட்ட செயலாளரும் வடக்கு சட்டமன்ற உறுப்பினருமான அம்மன் கே அர்ஜுனன், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கேஆர் ஜெயராம் மற்றும் முன்னாள் அமைச்சர் செ ம. வேலுச்சாமி உட்பட கழகத்தின் முக்கிய நிர்வாகிகளும், தொண்டர்களும் ஏராளமானோர் கலந்துகொண்டு இரட்டை இலை சின்னத்துக்கு வாக்குகளை சேகரித்தார்.

அதைத்தொடர்ந்து, பேசிய அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன், அதிமுக எப்பொழுதும் ஏழை எளிய மக்களுக்கு அரணாக விளங்கக்கூடிய கட்சி. கடந்த கொரோனா காலங்களில் எந்தவித சாதி மத பாகுபாடு இன்றி அனைவருக்கும் வீடு வீடாக அத்யாவசிய பொருட்கள் அனைத்தையும் கொண்டு சேர்த்தது அதிமுக மட்டுமே. மேலும் ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது ஒரு முழு மனித வளர்ச்சியை போன்று இருக்க வேண்டும். ஏழை எளிய மக்களுக்காக உறுதுணையாக இருப்போம், எனக் கூறினார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ