பதவி விலகுகிறாரா அண்ணாமலை..? கூட்டணி குறித்து முடிவெடுக்க யாருக்கு அதிகாரம் : நயினார் நாகேந்திரன் சொன்ன தகவல்

Author: Babu Lakshmanan
18 March 2023, 1:47 pm

நெல்லை ; அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் பதவியை ராஜினாமா செய்வேன் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறியது தொடர்பாக அக்கட்சியின் எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் பதிலளித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பாஜக அதிமுகவுடன் இணைந்து பயணித்து வருகின்றனர். குறிப்பாக கடந்த 2022 சட்டமன்ற தேர்தல் மற்றும் பாஜக அதிமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டு நான்கு தொகுதியில் வெற்றி பெற்றது. அதேசமயம் கடந்த சில நாட்களாகவே பாஜக, அதிமுக கூட்டணியில் விரிசல் ஏற்படும் வகையில், பல்வேறு சம்பவம் நடைபெற்றது. குறிப்பாக தற்போது இரு கட்சி நிர்வாகிகளும் ஒருவருக்கொருவர் மாறி மாறி எதிர் எதிரான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இது போன்ற சூழ்நிலையில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம் கூட்டணி வைத்தால் பதவி விலகுவதாக அண்ணாமலை கூறிய கருத்து தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அதிமுகவினர் கருத்து தெரிவிக்கும் போது அண்ணாமலை கூறியது மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் பதவி விலகுவதாக அண்ணாமலை கூறியது அவரது தனிப்பட்ட கருத்து என நெல்லையில் பாஜக சட்டமன்ற குழு தலைவரும், எம்எல்ஏவுமான நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

நெல்லை பாளையங்கோட்டையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்:- பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி குறித்து அகில இந்திய தலைமை தான் முடிவு எடுக்கும். அதுதான் எங்களது முடிவு. அண்ணாமலை தெரிவித்தது அவரது தனிப்பட்ட கருத்தாக உள்ளது. தமிழகத்தில் யாரும் இதுவரை எந்த கட்சியும் தனியாக போட்டியிடவில்லை. திமுக, அதிமுக, பாரதிய ஜனதா கட்சிகள் கூட்டணி அமைத்து தான் போட்டிடுகிறது. தனியாக யாரும் போட்டியிட முடியாது.

திருநெல்வேலி மாநகராட்சியில் உட்கட்சி பூசல் தொடர்பாக மோதல் நடைபெற்று வருவது அவர்கள் கட்சி விவகாரம மாநகராட்சி பகுதியில் அவர்கள் பிரச்சனைகளை மறந்து எல்லாப் பணிகளும் நடைபெற வேண்டும், என அவர் தெரிவித்தார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!