நடிகர் விஜய் பற்றி டுவிட்டரில் பதிவிட்ட பாஜக முக்கிய தலைவர்…! பரபரப்பில் ரசிகர்கள்
12 August 2020, 12:48 pmசென்னை: நடிகர் விஜய்யை பாஜக மூத்த தலைவரான வானதி ஸ்ரீனிவாசன் பாராட்டி உள்ளார்.
தமிழக திரையுலகத்தில் ஒரு சேலஞ்ஜ் ஓடிக் கொண்டு இருக்கிறது. அது தான் க்ரீன் இந்தியா சேலஞ்ஜ். டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு அண்மையில் நடிகர் விஜய்க்கு இந்த க்ரீன் சேலஞ்ஜ் என்ற சவாலை விடுத்தார்.
அந்த சவாலை ஏற்று அதை நிறைவேற்றியும் காட்டிவிட்டார் நடிகர் விஜய். அது பற்றி தமது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் கூடிய பதிவை வெளியிட்டு அசத்திவிட்டார். இதை கண்ட அவரது ரசிகர்கள் சந்தோஷத்தில் மிதந்து வருகின்றனர்.
டுவிட்டர் பதிவில் மகேஷ் பாபுக்கு நன்றியும் கூறி இருந்தார் விஜய். இந்த சேலஞ்ஜை அனைவரும் ஏற்க வேண்டும் என்றும் ஒரு வேண்டுகோளை விடுத்து இருந்தார்.
இந் நிலையில் அவரது இந்த பதிவுக்கும், நடவடிக்கைக்கும் பாராட்டு தெரிவித்துள்ளார் பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான வானதி ஸ்ரீனிவாசன். அவர் தமது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:
இளைய தலைமுறைக்கு “பசுமை” யைப்பற்றி கூற விழையும் நடிகர்கள் திரு[email protected] & திரு. @urstrulyMahesh இருவருக்கும் வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த டுவிட்டை கண்டு விஜய் ரசிகர்கள் இன்னமும் ஏக குஷியாகிவிட்டனர்.