10 புதிய அரசு கலைக்கல்லூரிகள்… ரூ.30.76 கோடியில் பள்ளி, கல்லூரிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள்.. பட்ஜெட்டில் கல்வித்துறைக்கான முக்கிய அம்சங்கள்..!!
Author: Babu Lakshmanan13 August 2021, 11:57 am
நடப்பாண்டில் தமிழகத்தில் புதியதாக 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
2021 – 2022ம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட நிதி நிலை அறிக்கை இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. நிதியமைச்சர் தியாகராஜன் முதன் முதலாக இன்று பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறார். அதில் கல்வித்துறைக்கென பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. அவை பின்வருமாறு :-
மாநிலக் கல்வி கொள்கையை உருவாக்க வல்லுநர் குழு அமைக்கப்படும்
பள்ளிக்கல்வித்துறைக்கு 2,599.54 கோடி ஒதுக்கீடு
மலைப்பகுதிகளில் புதிதாக 12 தொடக்கப்பள்ளிகள் துவங்கப்படும், 22 பள்ளிகளின் தரம் உயர்த்தப்படும்
பள்ளிகளில் மனப்பாட முறைக்கு மாற்றாக சிந்திக்கும் முறைப்படி பாடங்கள் கற்பிக்க நடவடிக்கை
அரசுப்பள்ளி மாணவர்கள் கணினித்திறன்களை இளம் வயதிலேயே உறுதி செய்ய ரூ.114 கோடி ஒதுக்கீடு
865 உயர்நிலைப்பள்ளிகளில் ரூ.20.76 கோடியில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்படும்
தமிழகத்தில் புதியதாக 10 அரசு கலைக் கல்லூரிகள்
நடப்பாண்டில் தமிழகத்தில் புதியதாக 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும்
25 அரசு மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் ரூ.10 கோடியில் ஸ்மார்ட் வகுப்பறைகள்
0
0