யூடியூபர் சாட்டை துரைமுருகனுக்கு வழங்கிய ஜாமீன் ரத்து : சேனலை முடக்கவும் அனுமதி? பரபரப்பு உத்தரவை போட்ட நீதிமன்றம்!!

Author: Udayachandran RadhaKrishnan
7 June 2022, 12:13 pm

யூடியூபர் சாட்டை துரைமுருகனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை உயர் நீதிமன்றம் மதுரை கிளை ரத்து செய்தது.

முதலமைச்சர் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு கருத்துகளை பதிவிட்ட வழக்கில் சாட்டை துரைமுருகனுக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கு தொடர்பாக ஜாமீன் பெற்ற இரண்டாவது நாளே மீண்டும் அவதூறு கருத்துகளை பதிவு செய்ததால் சாட்டை துரைமுருகனுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஒப்பந்த விதிகளை மீறினால் குறிப்பிட்ட வீடியோக்களை நீக்கவும், தேவைப்படின் சேனலை முடக்கவும் செய்யலாம் என்றும் உயர் நீதிமன்ற கிளை தெரிவித்துள்ளது. சமூக வலைதள நிறுவனங்கள் வீடியோக்களை நீக்காத பட்சத்தில் அவர்களும் குற்றவாளிகளே என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும், அவதூறு கருத்துக்களை பதிவிட்டால் அதனை சமூக வலைத்தளங்களே நீக்க வேண்டும் அல்லது அதனை நீக்க போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறிய நீதிமன்றம், நடவடிக்கை எடுக்க தவறும் சமூக வலைத்தளங்கள் மீதும் போலீஸ் நடவடிக்கை எடுக்கலாம், வீடியோவை நீக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது.

ஜாமீன் கேட்டபோது இனி அவதூறு கருத்து பதிவிடமாட்டேன் என பிராமணப்பத்திரம் தாக்கல் செய்திருந்தார் சாட்டை துரைமுருகன் என்பது குறிப்பிடத்தக்கது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!