நயினார் நாகேந்திரன் மீது வழக்குப்பதிவு… நெல்லை தொகுதியில் போட்டியிடும் 14 வேட்பாளர்களுக்கும் நோட்டீஸ்!!

Author: Udayachandran RadhaKrishnan
8 April 2024, 11:51 am

நயினார் நாகேந்திரன் மீது வழக்குப்பதிவு… நெல்லை தொகுதியில் போட்டியிடும் 14 வேட்பாளர்களுக்கும் நோட்டீஸ்!!

நெல்லை மக்களவை தொகுதியில் போட்டியிடும் 14 வேட்பாளர்களுக்கு தேர்தல் செலவின பார்வையாளர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

தேர்தல் செலவு கணக்குகளை இன்று மாலை 5 மணிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், கணக்குகளை சமர்ப்பிக்காத நிலையில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கணக்கு தாக்கல் செய்ய தவறினால் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அனைத்து அனுமதிகளும் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 23 வேட்பாளர்களில் 9 வேட்பாளர்கள் மட்டுமே செலவு கணக்கை முழுமையாக தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதே போல நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உட்பட 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விதிகளை மீறி இரவு 10 மணிக்கு மேல் தேர்ல் பிரச்சாரம் செய்ததாக தேர்தல் அதிகாரிகள் புகார் தெரிவித்ள்ளனர்.

  • Pathikichu Song Release விடாமுயற்சி பொங்கல் கொண்டாட்டத்திற்கு எண்டே கிடையாது…படத்தின் அடுத்த பாடல் ரெடி ஆட ரெடியா…!